புதுச்சேரி ஆட்சிக் கவிழ்ப்பில் பெகாசஸ் ஒட்டுக் கேட்பு... நாராயணசாமிக்கு வந்த தீராத சந்தேகம்..!

By Asianet TamilFirst Published Jul 27, 2021, 9:52 PM IST
Highlights

புதுச்சேரியில் ஆட்சிக் கவிழ்ப்பு சம்பவத்தில் என்னுடைய செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டிருக்கலாம் என நான் சந்தேகப்படுகிறேன் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
 

இதுதொடர்பாக நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோவில் கூறுகையில், “பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசு மிகப்பெரிய விலையைக் கொடுத்து, இஸ்ரேல் மென்பொருளை வாங்கி நம் நாட்டில் பலருடைய செல்போன் பேச்சை ஒட்டுக் கேட்டுள்ளார்கள். அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, முன்னாள் சிபிஐ இயக்குநர் உட்பட அதிகாரிகள், அரசியில்வாதிகளுடைய செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ள இந்த விவகாரம் நாட்டை உலுக்கியிருக்கிறது. இந்தப் பிரச்சினை நாடாளுமன்றத்திலும் வெடித்திருக்கிறது.
இதுதொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன. 6 நாட்களாக தற்போது நாடாளுமன்றம் முடங்கிக் கிடக்கிறது. ஆனால், இதைப் பற்றியெல்லாம் பிரதமர் கவலைப்படவில்லை. இந்த மென்பொருளைப் பயன்படுத்தி பல மாநில அரசுகளின் ஆட்சியை மத்திய அரசு கவிழ்த்துள்ளது. புதுச்சேரியில் ஆட்சிக் கவிழ்ப்பு சம்பவத்தில் என்னுடைய செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டிருக்கலாம் என நான் சந்தேகப்படுகிறேன். என்னுடைய மொபைலில் பேசும்போது எனக்கு சமிக்ஞைகள் தெரிந்தன. இதுப்பற்றி வெளிப்படையான விசாரணை நடத்தினால்தான் உண்மை வெளிவரும்” என்று அந்த வீடியோவில் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
 

click me!