ரஜினிக்கு பதிலளிக்க ஸ்டெர்லைட்டை தூண்டியதே பி.ஜே.பி.தான்: மோடியின் உள் அரசியலை திரைகிழித்து காட்டும் கமல் டீம்.

First Published Apr 2, 2018, 1:44 PM IST
Highlights
The BJP is the stimulus to respond to Rajini by Kamal Team


சுயமரியாதை சிந்தனையில் வறட்டுப் பிடிவாதம் உடையவர் கமல்ஹாசன். தான் இருக்கும் ஒரு தளத்தில் தான் மட்டுமே பிரதானப்படுத்தப்பட வேண்டும் என்று நினைப்பவர். மல்டி நாயகர்களுடன் அவர் இணைந்து நடிக்கும் படங்களைப் பார்ப்பவர்களுக்கு அது நன்கு தெரியும்.

இந்நிலையில் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்திருக்கும் கமல், ‘நான் இங்கே ஹீரோ இல்லை. சக தமிழன்!’ என்று ஆச்சரியப்படுத்தினார் துவக்கத்தில். அந்த வார்த்தைகளை வெறும் வாக்கியமாக இல்லாமல் சத்தியமானதாகவே அவர் பின்பற்ற துவங்கியிருப்பது, அவரது இன்றைய ரியாக்‌ஷன் மூலம் தெரிகிறது.

அதாவது அரசியல் களத்தில் கமல் மற்றும் ரஜினிக்கு இடையிலிருக்கும் ரேஸ்! மிக வெளிப்படையாக ஸ்டெர்லைட் விவகாரத்தில் வெளிப்பட்டிருக்கிறது. அந்த ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தும் குமாரரெட்டியார்புரம் மக்களுடன் களத்தில் நிற்கப்போவதாக கமல் அறிவித்தார், ரஜினி அமைதி காத்தார். ஞாயிற்றுக் கிழமையன்று காலையில் கமல், தூத்துக்குடியை நோக்கி விமான ஏற தயாரானார்.

அப்போது ரஜினிகாந்த், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஒரு ட்விட்டை தட்டிவிட்டு, ஆட்டத்தை மொத்தமாக தன் பக்கம் மாற்றியமைத்தார். இதில் கமலுக்கு பெரும் ஆதங்கம். நேரடியாக களம் சென்றவர், மக்களோடு நின்றும் அங்கிருந்த சிறார்களை கொஞ்சி மகிழ்ந்தும் ஈர்த்தார்.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளரான வேதாந்தா குரூப்ஸ் ரஜினிகாந்துக்கு பதில் தந்திருக்கிறது, அதில் ‘எங்கள் ஆலை குறித்து நீங்கள் கேள்விப்பட்ட தகவல்கள் பொய்யானவை.’ என்று ஆரம்பித்து சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறது.

இந்த விஷயம் மீடியாவில் வைரலாகி இருக்கிறது. ‘யாரெல்லாமோ ஆளாளுக்கு கத்துனாங்க, கரைஞ்சாங்க, களத்துக்கே போனாங்க. ஆனா எங்க தலைவரோட ஒத்த ட்விட்டுக்கு ஸ்டெர்லைட் ஓனரே வியர்த்துக் கொட்டுறான் பாரு.’ என்று சூப்பரின் ரசிகர் மன்ற நிர்வாகிகள் கொக்கரித்திருக்கின்றனர்.

இந்நிலையில் ’ரஜினிக்கு பதில் சொன்ன ஸ்டெர்லைட் நிர்வாகம் எனக்கும் பதில் சொல்லட்டும்’ என்று தடாலடியாய் கருத்து சொல்லியிருக்கிறார் கமல். எந்த ஈகோவையும் காட்டாமல், அவர்கள் ரஜினிக்குதானே பதில் சொன்னார்கள்! நமக்கா சொன்னார்கள்! என்றெல்லாம் யோசிக்காமல் கமல் இப்படியொரு ரியாக்‌ஷனை காட்டியிருக்கிறார்.

இதற்கு விளக்கம் கொடுக்கும் கமலின் கட்சி நிர்வாகிகள் “தலைவர் நறுக்குன்னு சொல்லியிருக்கார். ரஜினியோட வெத்து ட்விட்டுக்கு, வேதாந்தா குரூப்ஸ் ரியாக்ட் பண்ணியது பி.ஜே.பி.யின் தூண்டுதலால்தான். கமல் களத்துக்கே போயிட்டாலும் அவரை கண்டுக்காதீங்க, ஆனா ரஜினியோட ட்விட்டுக்கு பதில் சொல்லி அவருக்கு  மரியாதை செய்யுங்க!ன்னு மோடி அரசு பிரஷர் கொடுத்ததால்தான் ஸ்டெர்லைட் நிர்வாகம் இப்படி பண்ணியிருக்குது.

என்னதான் விளக்கம் கொடுத்தாலும் ரஜினி அதுல உள்ளுக்குள்ளே போயெல்லாம் ஆராய மாட்டார். ஆனால் கமல்கிட்ட ஒத்த வார்த்தையை சொன்னாலும் அவரு உள்ளே போயி ஆராய்ஞ்சு ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்டு, அறிவியல் ரீதியாக தங்களுடைய முகத்திரையை கிழிப்பார்! அப்படின்னு ஸ்டெர்லைட்காரனுக்கு தெரியும். அதனாலதான் ரஜினிக்கு மட்டும் சீன் போட்டுட்டு, எங்க தலைவர்ட்ட அமைதியா இருக்கான்.

இதையெல்லாம் எங்க தலைவர் ரொம்ப அழகா கணிச்சுதான், நேற்றே ‘ஆலை நிர்வாகம் உங்களிடம் பொய் சொல்லிட்டு இருக்குது. உங்களை படிக்காதவங்கன்னு நினைக்குது, நானும் அப்படித்தான், படிப்பறிவு இல்லாதவன் தான். இந்த அறிவை வைத்துத்தான் இத்தனை நாளா பிழைச்சுட்டு இருக்கேன்.’ அப்படின்னு தெளிவா சொல்லிட்டார்.

எங்க தலைவர்ட்ட இருக்கும் சிற்றறிவே போதும், ஸ்டெர்லைட் கொடுக்கும் எந்த விளக்கத்தையும் பிரித்து மேயுறதுக்கு.” என்கின்றனர்.

ஹூம்! கமல் - ரஜினி பஞ்சாயத்துக்கே தனி நீதிமன்றம் அமைக்கணும் போலிருக்குது.

click me!