காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ராஜினாமா தீர்வாகாது - தம்பிதுரை எம்.பி.

First Published Apr 2, 2018, 1:19 PM IST
Highlights
Resignation can not be solved - Thambidurai MP


காவிரி விவகாரத்தில் எம்.பி.க்கள் ராஜினாமா செய்வதால் தீர்வு கிடைக்காது என்று அதிமுக எம்.பி. தம்பிதுரை கூறியுள்ளார்.

காவிரி நதிநீர் வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியது. தமிழகத்துக்கு வழங்கப்படும் காவிரி நீர் குறைத்த உச்சநீதிமன்றம், காவிரி பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் திட்டத்தை அமைக்குமாறு உத்தரவிட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால்தான் காவிரி பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் எனக் கூறி தமிழக விவசாயிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுததி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறிய ஸ்கீம் என்ற வார்த்தைக்க விளக்கம் கேட்டு மத்திய அரசு நேற்று முன்தினம் மனுதாக்கல் செய்தது. இது குறித்து இன்று விளக்கமளித்த உச்சநீரிமம்னறம், காவிரி தீர்ப்பில் செயல் திட்டம் தான் குறிப்பிடப்பட்டுள்ளது, மேலாண்மை வாரியம் குறிப்பிடவில்லை என்று விளக்கமளித்தது.

இந்த நிலையில், அதிமுக ராஜ்யசபா எம்.பி. முத்துக்கருப்பன், இன்று காலை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இது குறித்து துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால், எம்.பி. பதவியை ராஜினாமா செய்வதாக குறிப்பட்டதை அவர் செய்தியாளர்களிடம் படித்துக் காட்டினார். எம்.பி. முத்துக்கருப்பன் ராஜினாமா கடிதத்தில் காரணத்தை குறிப்பிடுவது, நாடாளுமன்ற சட்ட விதிகளுக்கு எதிரானது என நிபுணர்கள் கருத்து கூறி வருகின்றனர். இதனால், எம்.பி. முத்துக்கருப்பண் ராஜினாமாவை ஏற்றுக்கொள்வதில் சிக்கல் எழுந்துள்ளது.

இந்த நிலையில், அதிமுக எம்.பி.யும் துணை சபாநாயகருமான தம்பிதுரை, இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், காவிரி விவகாரத்தில் ராஜினாமா செய்வது தீர்வாகாது. முத்துக்கருப்பன் எம்.பி.யின் ராஜினாமா முடிவு, அவருடைய தனிப்பட்ட விருப்பம் என்றார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை நாடாளுமன்றத்தில் போராட்டம் தொடரும் என்றும் எந்த நிலையிலும் பின்வாங்க மாட்டோம் என்றும் கூறினார். மேலும் பாராளுமன்றம் மற்றும் தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களால் காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தம்பிதுரை கூறினார்.

click me!