காமராஜருக்கு மணிமண்டபம் கட்டினோம் என்று திமுகவின் ஆர்.எஸ்.பாரதி சொல்வது கேடு கெட்டது, வெட்கக்கேடானது என்று பாஜக மாநிலதுணைத் தலைவர் கரு.நாகராஜன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
ம.பொ.சிக்கு நினைவு மண்டபம்
ம.பொ.சிவஞானத்தின் 27ஆவது நினைவு தினத்தையொட்டி சென்னை தி.நகரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு கீழே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருப்படத்திற்கு பாஜக துணை தலைவர் கரு.நாகராஜன் மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் ம.பொ. சிக்கு நினைவு மண்டபம் கட்டித் தருவோம் என்று தமிழக அரசு கூறியது. ஆனால் அதற்கான பணிகள் இன்னும் நடைபெறவில்லை என்று கூறிய அவர் முதல்வர் ஸ்டாலின் ம.பொ.சி அவர்களுக்கு மணிமண்டபம் கட்டுவதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும் அதற்கான இடம் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் அவருடைய நினைவு மண்டபம் அமைய வேண்டும் என்பது பாஜகவின் விருப்பம் என்று தெரிவித்தார்.
பொய் வழக்கினால் பெண் தற்கொலை..! திமுகவினரை உடனே கைது செய்ய வேண்டும்- அண்ணாமலை ஆவேசம்
முதலமைச்சர் அஞ்சலி செலுத்தாதது ஏன்..?
தொடர்ந்து பேசிய அவர் ஊரப்பாக்கத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்திற்கு ம.பொ.சி பெயரை வைக்க வேண்டும் என்றும் வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் உள்ளிட்ட படங்களுக்கு வசனங்களை எழுதியவர் ம.பொ.சி என்றும் பெருமிதம் தெரிவித்தார். தமிழக முதல்வர் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதில்லை அது அவருடைய சுய விருப்பம் என்று கூறிய அவர் ஆனால் தியாகிகளின் நினைவு நாளிலும், பிறந்த நாளிலும் கூட அஞ்சலி செலுத்த முதல்வர் வருவதில்லை என்று கூறிய அவர் காமராஜர் நினைவிடத்திற்கு நேற்று பல கட்சிகளின் தலைவர்கள் வந்திருந்தனர். நினைவு மண்டபத்தில் இருந்து முதலமைச்சர் வீட்டிற்கு நடந்தே சென்று விடலாம். ஆனால் முதலமைச்சர் அங்கு வந்து அஞ்சலி செலுத்தாதது மிகுந்த வேதனை அளிப்பதாகவும் கூறினார். மேலும் பேசிய அவர் திமுகவின் ஆர்.எஸ் பாரதி நாங்கள் தான் காமராஜருக்கு மணிமண்டபம் கட்டினோம் என்று சொல்வது கேடு கெட்டது வெட்கக்கேடானது அவர் எதை வைத்து பேசுகிறார் என்று தெரியவில்லை என்று கரு.நாகராஜ் கடுமையாக சாடினார்.
இதையும் படியுங்கள்
சுங்கச்சாவடியில் கட்டணமின்றி பயணிக்கும் வாகனங்கள்..? ஊழியர்கள் பணி நீக்கம்...! அன்புமணி ஆவேசம்