ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் கையை கட்டிப்போட்டு.. கொழுப்பெடுத்த அமைச்சர்கள் ஆணவம்.. செல்லூர் ராஜூ பகீர்.

Published : Oct 03, 2022, 11:25 AM ISTUpdated : Oct 03, 2022, 05:50 PM IST
 ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் கையை கட்டிப்போட்டு.. கொழுப்பெடுத்த அமைச்சர்கள் ஆணவம்..  செல்லூர் ராஜூ பகீர்.

சுருக்கம்

அதிமுக ஆட்சியில் யானை பாகனாக இருந்த ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணனை, தற்போது குதிரை ஓட்டியாக இந்த அரசு பயன்படுத்துகிறது என திமுக அரசை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

அதிமுக ஆட்சியில் யானை பாகனாக இருந்த ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணனை, தற்போது குதிரை ஓட்டியாக இந்த அரசு பயன்படுத்துகிறது என திமுக அரசை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

தற்போது அரிசி கடத்தல் அதிகரித்து இருக்கிறது ஆனால் அத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணின் கைகள் கட்டி போடப்பட்டுள்ளது என்றும் செல்லூர் ராஜு குற்றம்சாட்டியுள்ளார். தற்போது திமுக அமைச்சர்களில் ஆணவ பேச்சு அதிகரித்துவிட்டது என்றும்,  அவர்கள் வாய்க்கொழுப்பு எடுத்துப் பேசுகிறார்கள் என்றும், மக்கள் வரிப்பணத்தில்தான் அவர்கள் இதை அனுபவிக்கிறார்கள் என்றும் ஒரு செல்லூர் ராஜு சரமாரியாக திமுக அமைச்சர்களை  தாக்கியுள்ளார்.

இதையும் படியுங்கள்:  சுங்கச்சாவடியில் கட்டணமின்றி பயணிக்கும் வாகனங்கள்..? ஊழியர்கள் பணி நீக்கம்...! அன்புமணி ஆவேசம்

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு  மதுரையின் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-  தீபாவளி பண்டிகை வர உள்ள நிலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது,  விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை குறைக்க தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும்,  தற்போது திமுக அமைச்சர்கள் ஆணவ பேச்சு பேசி வருகின்றனர், வாய்க்கொழுப்பு அதிகரித்துவிட்டது, மக்களின் வரிப்பணத்தில் தான் அவர்கள் ஓசியாக வாழ்கிறார்கள்.

இதையும் படியுங்கள்: ஓபிஎஸ், சசிகலா, டிடிவிக்குதான் என்னுடைய ஆதரவு.. கொங்குவில் இருந்து வந்த முன்னாள் எம்எல்ஏ குரல்..!

ஆனால் அவர்கள் பெண்களைப் பார்த்து ஓசி என்கிறார்கள். ஓசி என்ற இந்த வார்த்தையை தவிர்ப்பதற்கு தான் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் விலையில்லா பொருட்கள் என குறிப்பிட்டார். இப்போது ஐஏஎஸ் அதிகாரிகளை இந்த அரசு மோசமாக நடத்துகிறது, அதிமுக ஆட்சியில் ராதாகிருஷ்ணன் யானைப் பாகனை போல செயல்பட்டார், ஆனால் இந்த ஆட்சியில் குதிரை ஓட்டிய போல அவரை பயன்படுத்துகின்றனர். 

திறமையான அதிகாரிகளை நன்கு நடத்தவேண்டும்.  அரிசி கடத்தல் அதிகரித்து விட்டது, ஆனால் அதன் செயலாளர் ராதாகிருஷ்ணனின் கைகள் கட்டி போடப்பட்டுள்ளது. போதைப்பொருள் அதிகரித்து விட்டதால் நான் சர்வாதிகாரியாக மாறுவேன் என ஸ்டாலின் கூறினார், ஆனால் இதுவரை சர்வாதிகாரியாக மாறவில்லை,  மதுரை மேயர் இந்திராணி அமைச்சர் பிடிஆர் சொல்வதை மட்டும்தான் கேட்கிறார், அவருக்குச் கொஞ்சம் கூட சுதந்திரம் இல்லை, இவ்வாறு செல்லூர் ராஜூ கூறியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

இப்படியொரு ப்ளானா..? டபுள் ஸ்டாண்ட் விஜயின்..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!
திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!