தலைசிறந்த கட்டமைப்புகளே தலை சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும்.. பிரதமர் மோடி உரை

By Ezhilarasan BabuFirst Published May 26, 2022, 7:44 PM IST
Highlights

மத்திய  அரசு, மாநில அரசு துறைகளில் சார்பில் சுமார் 31,400 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று அர்ப்பணித்தார். 

மத்திய  அரசு, மாநில அரசு துறைகளில் சார்பில் சுமார் 31,400 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று அர்ப்பணித்தார். இந்நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மற்றும் மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.  இதற்கான நிகழ்ச்சி சென்னை நேரு  விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. முன்னதாக சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என் நேரு உள்ளிட்டோர் வரவேற்றனர்.

மற்றும் பாஜக முன்னணி நிர்வாகிகளும் அதில் இடம் பெற்றனர். அதனைத் தொடர்ந்து ஐஎன்எஸ் விமான தளத்தில் பிரதமர் மோடியை முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்றார். இந்நிலையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் திமுக மற்றும் பாஜக தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டுள்ளனர். இதில் 31,400 கோடி ரூபாய் மதிப்பில் * சென்னை - பெங்களூரு இடையே ஆந்திரா வழியாக ரூ.14,870 கோடி மதிப்பில் 262 கி.மீ. விரைவுச்சாலை திட்டம் , உள்ளிட்ட  5 முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தும், 6 புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். பின்னர் மேடையில் உரையாற்றானர் அதன் விவரம் பின்வருமாறு:-

தமிழ் நாட்டின் கலாச்சாரம் மிகவும் சிறப்பானது. நாட்டின் வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்காற்றுகிறது. ஒவ்வொரு துறையிலும் தமிழர்கள் சிறந்து விளங்குகின்றனர். காது கேளாதோர் ஒலிம்பிக்கில் இந்தியா பெற்ற 16 பக்கங்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 6 பதக்கங்களை பெற்றனர்.

பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் ஆர்வம் மிகுந்தவை, தமிழ் நிலையானது, தமிழ் கலாச்சாரம் மிகப் பெரியது, சென்னை முதல் கனடா வரை, மதுரை முதல் மலேசியா வரை, நாமக்கல் முதல் நியூயார்க் வரை பரவியுள்ளது. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கான்ஸ் திரைப்பட விழாவில் வேட்டி அணிந்து சிவப்பு கம்பளத்தில் நடை போட்டது பெருமைக்குரியது.  பெங்களூர் சென்னை வழித்தடம் சென்னை துறைமுகம் மதுரவாயல் என பொருளாதார வலிமையோடு தொடர்புடைய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. 

மதுரை தேனி ரயில் திட்டம் விவசாயிகளுக்கு அதிக பலன் தரக்கூடியது, கலங்கரை விளக்கம் திட்டத்தின்கீழ் வீடு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்,  சென்னை போன்று பிற இடங்களிலும் சரக்கு முனையம் கட்டப்படும். எதிர்காலத் தேவையை நோக்கமாகக் கொண்டு நவீன திட்டங்கள் தீட்டப்படுகிறது,  நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையை விட உங்கள் குழந்தைகள் நல்ல வாழ்க்கையை வாழ்வார்கள் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். சூழலுக்கு ஏற்ப வீடுகளைக் கட்டுவதில்  உலக சவாலை  எதிர்கொண்டு வெற்றி பெற்றிருக்கிறோம்.எந்த நாடுகள் எல்லாம் உட்கட்டமைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததோ அந்த நாடுகளெல்லாம் வளரும் நிலையில் இருந்து வளர்ந்த நாடுகள் என்ற வரலாற்றை பெற்றுள்ளது.

சமூக கட்டமைப்பை மேம்படுத்துவதில் வாயிலாக நம்மால் ஏழைகளின் நலனை உறுதி செய்ய முடியும். ஒவ்வொரு இல்லத்திற்கும் குடிநீரைக் கொண்டு செல்லும் நோக்கில் பணியாற்றுகிறோம். திட்டங்கள் அனைவரையும் சென்று சேரும் வகையில் செயல்படுகிறோம், தலை சிறந்த உட்கட்டமைப்பு வசதிகள் மட்டுமே சிறந்த எதிர்காலத்தை அளிக்க முடியும். சாலை, மின்சாரம், குடிநீர் என்ற உட்கட்டமைப்பு தாண்டி எங்கள் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நாட்டின் உட்கட்டமைப்பு வலுப்படுத்துவதால் இளைஞர்கள் எதிர்காலத்தில் பயனடைவார்கள். ஒவ்வொரு கிராமத்திற்கும் அதிவேக இணைய சேவை கொண்டு செல்வதை கவனித்து வருகிறோம் இவ்வாறு அவர் பேசினார்.
 

click me!