தமிழகத்துக்கு மேலும் பல திட்டங்கள், கூடுதல் நிதி ஆகியவை வேண்டும்… பிரதமரிடம் கெத்தாக கேட்ட மு.க.ஸ்டாலின்!!

By Narendran SFirst Published May 26, 2022, 7:21 PM IST
Highlights

தமிழகத்துக்கு மேலும் பல திட்டங்கள் மற்றும் கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். 

தமிழகத்துக்கு மேலும் பல திட்டங்கள் மற்றும் கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய அரசு துறைகளின் சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்ட விழா நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் மோடி கலந்துக்கொள்கிறார். இதற்காக  பிரதமர் மோடி ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு வந்தார். சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு, விமான நிலையத்தில் சிறப்பு  வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், திமுக பொருளாளர் துரைமுருகன்,  அமைச்சர் க.பொன்முடி உள்ளிட்டோர் பிரதமர் மோடியை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பின்னர் விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐ.என்.எஸ் தளத்திற்கு வந்தடைந்தார். அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரை வரவேற்றார். பின்னர் பிரதமர் மோடி, சாலை மார்க்கமாக நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு சென்று நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மத்திய, மாநில அரசுத் துறைகளின் சார்பில் ரூ.31,400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களை பிரதமர் மக்களுக்கு அர்ப்பணித்தார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை தொடங்கிவைக்க வந்துள்ள பிரதமர் மோடிக்கு நன்றி.

இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் திகழும் தமிழ்நாடு கல்வி, பொருளாதாரம், மருத்துவம், ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்திய நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குச் சிறப்பான பங்களிப்பை வழங்குகிறது. இந்திய நாட்டின் வளர்ச்சிவில் தமிழ்நாட்டு மக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமாக அமைந்திருக்கிறது. இந்தியாவின் பிற மாநிலங்களை விட தமிழ்நாட்டின் வளர்ச்சி தனித்துவம் மிக்கது அந்த வளர்ச்சி வெறும் பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல சமூகநீதி, பெண்கள் முன்னேற்றம், சமத்துவம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி. அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி. கட்சத்தீவை மீட்டெடுத்து உரிமையை நிலைநாட்ட இது தகுந்த தருணம், ஜி.எஸ்.டி இழப்பீடு காலத்தை குறைந்தது மேலும் 2 ஆண்டு காலத்துக்கு நீட்டிக்க வேண்டும். இந்திக்கு இணையான அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும். உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும். நீட் விலக்கு சட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும். உறவுக்கு கை கொடுப்போம். உரிமைக்கு குரல் கொடுப்போம். தமிழகத்துக்கு மேலும் பல திட்டங்கள் மற்றும் கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும். தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகையை விரைந்து விடுவிக்க வேண்டும். தமிழகத்துக்கு மேலும் பல திட்டங்கள் மற்றும் கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என்று தெரிவித்தார். 

click me!