தமிழகம் வந்தார் மோடி.. மூத்த அமைச்சர்கள் துரை முருகன், பொன்முடி, கே.என் நேரு வரவேற்றனர்.

By Ezhilarasan BabuFirst Published May 26, 2022, 5:10 PM IST
Highlights

தமிழகத்தில் 31,400 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைப்பதற்காக பிரமதர் மோடி தனி விமானத்தில் சென்னை வந்தார் அவரை மூத்த அமைச்சர்கள் கே.என் நேரு, மற்றும் துரைமுருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர். 

தமிழகத்தில் 31,400 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைப்பதற்காக பிரமதர் மோடி தனி விமானத்தில் சென்னை வந்தார் அவரை மூத்த அமைச்சர்கள் கே.என் நேரு, மற்றும் துரைமுருகன்  பொன்முடி உள்ளிட்டோர் வரவேற்றனர். அவர்களுடன் பாஜக முக்கிய பிரமுகர்கள் இருந்தனர். பிரதமர் மோடிக்கு வரவேற்பதற்காக கலைநிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. அதில் திமுக-பாஜக தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டுள்ளனர். 

 பிதமர் மோடி துவங்கி வைக்க உள்ள திட்டங்கள் பின்வருமாறு:-

* சென்னை - பெங்களூரு இடையே ஆந்திரா வழியாக ரூ.14,870 கோடி மதிப்பில் 262 கி.மீ. விரைவுச்சாலை..

* சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே 21 கி.மீட்டருக்கு ரூ.5,850 கோடியில் இரண்டு அடுக்கு 4 வழி உயர்மட்ட சாலை.

* நெரலூரு- தருமபுரி இடையே ரூ.3,870 கோடியில் 4 வழிச்சாலை..

* ரூ.720 கோடியில் மீன்சுருட்டி - சிதம்பரம் நான்கு வழிச்சாலை ஆகிய சாலை திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்..

* சென்னை எழும்பூர், ராமேசுவரம், மதுரை, காட்பாடி, கன்னியாகுமரி ஆகிய 5 ரயில் நிலையங்கள் நவீன வசதிகளுடன் ரூ.1,800 கோடியில் சீரமைக்கப்பட உள்ளன.

* சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் சென்னை அருகே மப்பேட்டில் ரூ.1,400 கோடியில் பன்மாதிரி போக்குவரத்து பூங்கா (மல்டி மாடல் லாஜிஸ்டிக் பார்க்) அமைக்கப்படுகிறது. 

* இந்த திட்டங்கள் உட்பட மொத்தம் ரூ.28,500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

* ரூ.2,900 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்டுள்ள 5 திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார்..மதுரை - தேனி இடையே ரூ.500 கோடியில் மேம்படுத்தப்பட்ட அகல ரயில் பாதை,

* சென்னை தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ரூ.590 கோடியில் 3-வது ரயில் பாதை, 

* எண்ணூர் - செங்கல்பட்டு இடையே ரூ.850 கோடியில் 115 கி.மீ. நீளத்துக்கான இயற்கை எரிவாயு குழாய் திட்டம், 

* திருவள்ளூர் - பெங்களூரு இடையே 271 கி.மீ. தொலைவில் 910 கோடியிலான இயற்கை எரிவாயு குழாய் திட்டம் ஆகியவற்றை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். 

* பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தின்கீழ் குறைந்த செலவில் வீடு கட்டும் திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையில் ரூ.116 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 1,152 வீடுகளை பயனாளிகளுக்கு பிரதமர் வழங்குகிறார்.
 

click me!