ஒரே இடத்தில் குவிந்த திமுக-பாஜக.. ஸ்டாலின் வாழ்க- ஜெய் மாதாகி.. மாறி மாறி டப் கொடுக்கும் தொண்டர்கள்.

Published : May 26, 2022, 04:54 PM IST
ஒரே இடத்தில் குவிந்த திமுக-பாஜக.. ஸ்டாலின் வாழ்க- ஜெய் மாதாகி.. மாறி மாறி டப் கொடுக்கும் தொண்டர்கள்.

சுருக்கம்

பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க உள்ள நிலையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் குவிந்துள்ள பாஜக- திமுக தொண்டர்கள் மாறி மாறி போட்டி கோஷம் எழுப்பி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. 

பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க உள்ள நிலையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் குவிந்துள்ள பாஜக- திமுக தொண்டர்கள் மாறி மாறி போட்டி கோஷம் எழுப்பி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் போலீசார் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். 


திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பாஜக திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது.  திராவிட மாடல் முழக்கத்தை திமுக வலுவாக முன்வைத்து வரும் நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட இதர பாஜக தலைவர்கள் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களை தாக்கியும் விமர்சித்தும் பேசி வருகின்றனர் அதே நேரத்தில் பாஜகவுக்கு எதிரான மனநிலையில் தமிழக அரசு மற்றும் அமைச்சர்கள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய மாநில அரசு துறைகள் சார்பில் 31, 400 கோடி  ரூபாய் மதிப்பில்  திட்டங்களை பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்க உள்ளார். இதற்கான நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆந்திரா மற்றும் கர்நாடக முதலமைச்சர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் தமிழக அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இன்னும் சற்று நேரத்தில் பிரதமர் மோடி அரங்கிற்கு வருகை தர உள்ளார். அவரை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் தமிழக முதலமைச்சர் பாஜக முன்னணி தலைவர்கள் விமான நிலையத்தில் வரவேற்க உள்ளனர். தமிழ்நாடு அமைச்சர்கள் மற்றும் மத்திய மாநில அரசுகளின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். விழா நடைபெற உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் திமுக பாஜக தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்துள்ளனர். இதன் காரணமாக அங்கு இரு தரப்பினருக்கும் இடையே கோஷம் மோதல் ஏற்பட்டுள்ளது.  திமுக தொண்டர்கள் அண்ணா, கலைஞர், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்க என கோஷம் எழுப்பி வரும் நிலையில் அதற்கு  டப் கொடுக்கும் வகையில் பாஜக தொண்டர்கள் பாரத் மாதா கி ஜே என முழங்கி வருகின்றனர்.

தொண்டர்கள் மத்தியில் ஒருவித எதிர்ப்பு மனநிலை இருப்பதால் பார்வையாளர்கள் மட்டத்தில் கூடுதல் காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர் இந்நிலையில் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில முதலமைச்சர்கள் காணொளி காட்சி மூலம் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் இந்த நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு நிலையில் அவர் பங்கேற்பாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அல்லது பிரதமரை விமான நிலையத்திற்கு சென்று சந்திப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மகளிர் உரிமைத் தொகை உயருகிறது..! எவ்வளவு தெரியுமா? முதல்வர் சொன்ன குட்நியூஸ்!
அமைச்சரின் இலாகா தெரியாமல் பேசுகிறார் அண்ணாமலை..! ஊராட்சி செயலாளர் பணியில் மோசடி இல்லை..! அடித்துச் சொல்லும் அதிகாரிகள்..!