காடுவெட்டி குருவை கடைசி வரை பயன்படுத்திக் கொண்டது ராமதாஸ் குடும்பம்... நினைவிடத்தில் கொந்தளித்த ஆதரவாளர்கள்.

By Ezhilarasan BabuFirst Published May 26, 2022, 4:15 PM IST
Highlights

காடுவெட்டி குரு உயிருடன் இருந்திருந்தால் வன்னிய மக்களுக்கு பாதுகாப்பாக இருந்திருப்பார், ஆனால் அவரை ராமதாஸ் குடும்பம் கடைசிவரை பயன்படுத்திக் கொண்டு காப்பாற்ற தவறிவிட்டது என காடுவெட்டி குரு ஆதரவாளர்கள் முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

காடுவெட்டி குரு உயிருடன் இருந்திருந்தால் வன்னிய மக்களுக்கு பாதுகாப்பாக இருந்திருப்பார், ஆனால் அவரை ராமதாஸ் குடும்பம் கடைசிவரை பயன்படுத்திக் கொண்டு காப்பாற்ற தவறிவிட்டது என காடுவெட்டி குரு ஆதரவாளர்கள் முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜெ குருவின் 

நான்காம் ஆண்டு நினைவு தினமான நேற்று அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த ஆதரவாளர்களால் இவ்வாறு பரபரப்பு ஏற்பட்டது. அதையும் அதிரடியாகவும், வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்றும் பேசக்கூடியவர் குருமூர்த்தி என்கிற காடுவெட்டி குரு. வன்னியர் சங்கத்தின் தலைவராக இருந்தவரகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் ஆவார். அவரது மறைவு பாமகவிற்கு  பெரும் பின்னடைவு என்பதை எவரும் மறுக்க முடியாது. அவர் பாமக நிறுவனர் ராமதாசின் நெருங்கிய உறவினரும் கூட, கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் ஜெயங்கொண்டம் சட்டமன்றத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். 2 முறை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்ட அவர் மேடையில் வன்னிய இளைஞர்களை வன்முறைக்கு தூண்டும் வகையில்  பேசுவார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டாக உள்ளது.

இந்நிலையில் அவர் மறைந்து நான்காம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அதில் ஏராளமான வன்னியர் சங்கத்தினர் பாமகவினர் குரு நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள மீன்சுருட்டி பகுதியில் 5000க்கும் அதிகமான கூடினார். இதனால் அங்கு சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு விடக்கூடாது என்ற காரணத்தினால் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டிருந்தனர். அப்போது அங்கு வந்திருந்த ஜெ.குரு ஆதரவாளர்கள் ராமதாஸ் குடும்பம் ஜே குரு நன்றாக இருந்தபோது அவரை கடைசி வரை பயன்படுத்திக்கொண்டது. ஆனால் அவர் உடல் நலிவுற்று மருத்துவமனையில் இருந்தபோது ராமதாஸ் குடும்பம் அவர் கவனிக்க தவறிவிட்டது. ஜே குரு இன்றும் உயிரோடு இருந்திருந்தால், வன்னியர்களுக்கு காவல் தெய்வமாக இருந்திருப்பார் என கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். ஏற்கனவே ஜெ குருவை பாமக தலைவர் ராமதாசும் அவரது குடும்பத்தினரும் அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்திக்கொண்டனர் கடைசி நேரத்தில் காப்பாற்ற தவறிவிட்டனர் என்ற குரு குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். தனது தந்தையே ராமதாஸ் குடும்பம் பயன்படுத்திக் கொண்டது என ஜெ.குருவின் மகன் கனலரசன் மாவீரன் மஞ்சள் படை என்ற அமைப்பை தொடங்கி பாமகவுக்கு எதிராக பேசி வருகிறார். பாமகவின் நம்பிக்கை மிகுந்த தளபதியாக ஜெ.குரு பார்க்கப்பட்டார் ஆனால் மருத்துவமனையில் இருந்தபோது அவருக்கு முறை சிகிச்சை அளித்து பாதுகாக்க பாமக தவறிவிட்டது என்றும், தொடர்ந்து ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் அதிருப்தி கருத்து இருந்து வருகிறது அதன் வெளிப்பாடாகவே ஜே குருவின் ஆதரவாளர்கள் இவ்வாறு முழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!