சமூக நீதி, சமத்துவம், பெண்ணுரிமை இதுதான் திராவிட மாடல்.. மோடி எதிரில் மாஸ் காட்டிய முதல்வர் ஸ்டாலின்.

By Ezhilarasan BabuFirst Published May 26, 2022, 6:49 PM IST
Highlights

தமிழகத்தில் 31,400  கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி இன்று நாட்டி மக்களுக்கு அற்பணித்தார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் 31,400  கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி இன்று நாட்டி மக்களுக்கு அற்பணித்தார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக பிரதமர் மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்புகொடுக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திமுக மற்றும் பாஜக தொண்டர்கள் ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர். இதில் 31 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுமக்களுக்கு அர்ப்பணித்தார்.

மதுரை தேனி இடையேயான ரயில் திட்டம் 850 கோடி மற்றும் 910 கோடி ரூபாய் மதிப்பில் நிறைவேற்றப்பட்டுள்ள 115 கிலோ மீட்டர் நீளம் உள்ள எண்ணூர் செங்கல்பட்டு பிரிவு மற்றும் 271 கிலோ மீட்டர் நீளமுள்ள திருவள்ளூர் பெங்களூரு பிரிவான இயற்கை எரிவாயு குழாய் திட்டங்கள் மற்றும் தமிழ்நாடு கர்நாடகா மற்றும் ஆந்திராவில் உள்ள நுகர்வோருக்கும் தொழிற்சாலைகளுக்கும் இயற்கை எரிவாயு விநியோகத்தை எளிதாக்கும் திட்டங்களையும் தொடங்கி வைத்தார். மேலும் சென்னை பெங்களூரு சாலை திட்டம் என ஏராளமான திட்டங்கள் மோடி  தொடங்கி வைத்தார். முன்னதாக மேடையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அதன் விவரம் பின்வருமாறு:-

தமிழக வளர்ச்சிக்கான திட்டங்களை பிரதமர் திறந்து வைக்கிறார். அதற்காக பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், வளர்ச்சியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது. தமிழகத்தில் வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல அது சமூக வளர்ச்சியை உள்ளடக்கியது. தமிழகத்தில் பொருளாதாரத்தையும் கடந்து சமூக நீதி, சமத்துவம், பெண்ணுரிமை அதில் அடக்கம் இதுதான் திராவிட மாடல் ஆட்சி. இதனால்தான் மற்ற மாநிலங்களில் வளர்ச்சியுடன் தமிழகத்தின் வளர்ச்சி தனித்துவமானது அது பிரதமர் மோடிக்கு தெரியும் என்று நம்புகிறேன். நாட்டின் மொத்த ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்களிப்பு 8.4 சதவீதமாக உள்ளது. கார்கள் ஏற்றுமதி 32.5 சதவீதமாக உள்ளது. நாட்டின் மொத்த வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்காற்றி வருகிறது

தமிழ்நாடு நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது. அதிக பங்களிப்பு செய்யும் தமிழக அரசுக்கு ஒன்றிய அரசு அதிக திட்டங்களுக்கு அதிக பங்களிப்புகளை செய்ய வேண்டும். தமிழ்நாடு வழக்கம் பொருளாதாரத்திற்கு ஏற்ப தமிழ்நாட்டிற்கு உதவிகளை, திட்டங்களை வாழங்க வேண்டும்.  பொருளாதாரம் மருத்துவம் என பல்வேறு வகையில் நாட்டின் வளர்ச்சிக்கு தமிழகம் அதிகரித்து வருகிறது. தமிழை இந்திக்கு இணையான மொழியாகவும், நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும். கலைஞர் சொன்னது போல உரிமைக்கு குரல் கொடுப்போம், உறவுக்கு கை கொடுப்போம். தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு வைத்துள்ள கோரிக்கைகளில் நியாயத்தை பிரதமர் புரிந்து கொள்வார் என நம்புகிறேன். இவ்வாறு பேசினார். 

click me!