கஷ்டத்தை சொல்லி அழுத இளம் பெண்.. ஆடைகளை அவிழ்க்கச் சொல்லி தனி அறையில் 60 வயது சாமியார் செய்த அட்டூழியம்.

Published : May 30, 2022, 08:09 PM IST
கஷ்டத்தை சொல்லி அழுத இளம் பெண்.. ஆடைகளை அவிழ்க்கச் சொல்லி தனி அறையில் 60 வயது சாமியார் செய்த அட்டூழியம்.

சுருக்கம்

பூஜை செய்வதாக கூறி 35 வயதான பெண்ணை நிர்வாணப்படுத்தி 60 வயது போலி சாமியார் உல்லாசம் அனுபவித்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

பூஜை செய்வதாக கூறி 35 வயதான பெண்ணை நிர்வாணப்படுத்தி 60 வயது போலி சாமியார் உல்லாசம் அனுபவித்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உடலுறவு வைத்துக் கொள்ளாவிட்டால் குழந்தை ஊனமாக பிறக்கும் என்றும், உன் அண்ணன், கணவர் இறந்து விடுவார்கள் என கூறி அந்த சாமியார் மிரட்டி அந்த பெண்ணை பணியை வைத்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சமூகம் ஒவ்வொரு நாளும் அறிவியல்ரீதியான வளர்ச்சியடைந்து வந்தாலும் ஒரு சில இடங்களில் மூடநம்பிக்கைகள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் அரங்கேறிய வண்ணம் உள்ளது. மந்திரம் மாந்திரீகம் என்ற பெயரில் சிலரின் பலவீனத்தை பயன்படுத்தி அவர்களை ஏய்த்து வாழும் சம்பவங்கள் பரவலாக அரங்கேறி வருகிறது. ஒரு சிலர் பொருளாதார நீ சுரண்டப்படுகின்றனர் இன்னும் பலர் பெண்களை  பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தும் கொடுமைகளை அரங்கேற்று வருகின்றனர். அந்தவகையில் மாந்திரீகம் என்ற பெயரில் மகாராஷ்டிராவில் நடந்த சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனேவில் சேர்ந்த ஒரு பெண் கடுமையான கடன் தொல்லையில் சிக்கினார்.

முதலில் அந்த பெண்ணை 60 வயது சாமியார் ஒருவரிடம் அழைத்து செல்லப்பட்டார். அந்த நபரிடம் அந்த பெண் தனது பிரச்சனைகளை கூறினார். அந்த பிரச்சனைகளை நிதானமாக கேட்ட அந்த சாமியார் பிரச்சினைகளை தீர்த்து வைக்கிறேன், அதற்கு சில சிறப்பு பூஜைகள் செய்ய வேண்டும் என்றார். அதற்கு அந்தப் பெண்ணும் ஒப்புக்கொண்டார், பின்னர் அந்த பெண்ணை மட்டும் தனியாக வரும்படி அழைத்த அந்த சாமியார் ரகசிய அறைக்கு அழைத்துச் சென்றார். பின்னர் அந்த சாமியார் ஆடைகளை அவிழ்க்குமாறு அந்த பெண்ணிடம் கூறினார். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அதற்கு சம்மதிக்கவில்லை,

பாதியில் இப்படி சம்மதிக்கவில்லை என்றால் உனத் அண்ணன் இறந்து விடுவார், உனக்கு பிறக்கும் குழந்தை ஊனமாக பிறக்கும் என எச்சரித்தார். அதற்கு அஞ்சி அந்த பெண் சாமியார் கூறியபடி ஆடைகளை அவிழ்த்தார். பின்னர் அந்த சாமியார் அந்தப் பெண்ணை கட்டிப்பிடித்து பாலியல் வக்கிரங்களில் ஈடுபட்டார். பின்னர் பாதிக்கப்பட்ட பெண் பூஜை என்ற பெயரில் தனக்கு நடந்த கொடுமை குறித்து தனது சகோதரரிடம் கூறினார். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் இதுகுறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த போலி சாமியாரை கைது செய்துள்ளனர். 
 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!