ஆன்லைன் ரம்மியை தடுக்க விரைவில் புதிய சட்டம்... உறுதி அளித்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு!!

By Narendran SFirst Published May 30, 2022, 7:11 PM IST
Highlights

ஆன்லைன் ரம்மியை ஒழிக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்றும் ஆன்லைன் ரம்மியை தடுக்க விரைவில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 

ஆன்லைன் ரம்மியை ஒழிக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்றும் ஆன்லைன் ரம்மியை தடுக்க விரைவில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் சாதிச் சண்டைகள் எங்கும் நடைபெறவில்லை. திமுக ஆட்சியில் காவல்துறையினர் சுதந்திரமாக செயல்பட்டு வருகின்றனர். திமுக ஆட்சி அமைந்த பின்னர் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. தமிழ்நாடு மிக அமைதியான மாநிலமாக திகழ்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு எல்லா வகையிலும் பொது அமைதியை பேணிக்காத்து வருகிறது. திமுக ஆட்சி அமைந்த பின் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

திமுக ஆட்சியில் சாதிச் சண்டைகள், மதச் சண்டைகள், பயங்கரவாத செயல்கள் எங்கும் நடைபெறவில்லை. திமுக ஆட்சியில் காழ்ப்புணர்ச்சிக்கு இடமில்லை. அதிமுக  ஆட்சியில் காவல்நிலைய மரணங்கள் நடைபெற்றது. அதிமுக கடைசி ஓராண்டு ஆட்சியில் 1695 கொலைகள் நடைபெற்றுள்ளது கொள்ளைகள் 146, கூலிப்படை கொலைகள் 30, போலீஸ் துப்பாக்கிச்சூடு 16 ஆனால் திமுக ஆட்சியில் இவையெல்லாம்  குறைக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மியை தடுக்க குறைபாடுகள் உள்ள சட்டத்தை அதிமுக அரசு இயற்றியது. குறைபாடுள்ள சட்டமாக இருந்ததால் நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்தது. ஆன்லைன் ரம்மியை தடுக்க விரைவில் புதிய சட்டம் கொண்டு வரப்படும். ஆன்லைன் ரம்மியை ஒழிக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. அதிமுக ஆட்சியில் தான் குட்கா, கஞ்சா புழக்கம் அதிக அளவில் இருந்தது.

திமுக ஆட்சி அமைந்த பின் கஞ்சா விற்பனை செய்ப்பவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதிமுக ஆட்சியில் தங்கு தடையின்றி குட்கா புழக்கத்தில் இருந்தது. அதிமுக ஆட்சியில் சென்னை மாநகரத்தில் நடைபெற்ற கொலைச் சம்பவங்களை பட்டியலிட்டால் நேரம் போதாது. கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டவர்களின் 813 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. மக்களால் நிராகரிக்கப்பட்டுவிட்ட விரத்தியில் எடப்பாடி பழனிசாமி உண்மைக்கு மாறான தகவல்களை தருகிறார். பொய் குற்றச்சாட்டுகள் சொல்வதை பொறுப்புணர்ந்து எடப்பாடி பழனிசாமி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். 

click me!