அண்ணாமலை செய்யும் அரசியல் திமுகவுக்கு எதிரானது அல்ல அதிமுகவுக்கு எதிரானது.. அலர்ட் செய்யும் திருமாவளவன்.

By Ezhilarasan BabuFirst Published May 30, 2022, 5:15 PM IST
Highlights

அதிமுகவை  பின்னுக்குத்தள்ளி பாஜகவை எதிர்க்கட்சியாக காட்ட வேண்டும் என்பதற்காக அண்ணாமலை அரைவேக்காட்டுத் தனமாக அரசியலை செய்து கொண்டிருக்கிறார் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் விமர்சித்துள்ளார்

அதிமுகவை  பின்னுக்குத்தள்ளி பாஜகவை எதிர்க்கட்சியாக காட்ட வேண்டும் என்பதற்காக அண்ணாமலை அரைவேக்காட்டுத் தனமாக அரசியலை செய்து கொண்டிருக்கிறார் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் விமர்சித்துள்ளார். அண்ணாமலை செய்யும் அரசியல் திமுகவுக்கு எதிரானது அல்ல அது அதிமுகவுக்கு எதிரானது என்றும் திருமாவளவன் விமர்சித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அடுத்தடுத்து பல திட்டங்களை அதிரடியாக அறிவித்து வருகிறது. அவற்றை மக்கள் வரவேற்று பாராட்டி வருகின்றனர். அதே நேரத்தில் ஒரு சில திட்டங்கள் விமர்சிக்கப்படுகிறது. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை, மின்வெட்டு, சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்த அதிமுக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுகவை கடுமையாக விமர்சித்து வருகின்றன.

அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் பாஜக அதிமுகவை விமர்சிப்பதில் முன்னணியில் இருந்து வருகிறது. தாங்களே உண்மையான எதிர்க்கட்சி என்ற பிம்பத்தை உருவாக்க முயற்சியில் அக்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களை மிக கடுமையாக விமர்சித்து வருகிறார். அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். பல்வேறு விஷயங்களில் பாஜக திமுகவை விமர்சிப்பதில் துரிதமாக செயல்பட்டு வருகிறது. அதிலும் சமீபத்தில் பிரதமர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மாநில உரிமைகளை முன்வைத்து பல கோரிக்கைகளை ஸ்டாலின் வாசித்தார். அதை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்து வருகிறார். மேடையில் வைத்து பிரதமரை கணக்குப்பிள்ளை போல முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி கேட்கிறார்.

ஒரு முதல்வர் பிரதமர் எதிரில் எப்படி நடந்துகொள்ளக் கூடாது என்பதற்கு ஸ்டாலின் நடந்துகொண்ட விதமே சாட்சி, அவரின் பேச்சை எண்ணி வெட்கப்படுகிறேன் என விமர்சித்தார். அவர் இந்த விமர்சனம் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது, திமுக அமைச்சர்கள் பலரும் அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். முதல்வர் அப்படி என்ன தவறாக பேசிவிட்டார்,  ஒரு மாநிலத்தின் தேவைகளை பிரதமருக்கு கோரிக்கையாக வைத்தது தவறா என்று பலரும் அண்ணாமலையை கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் அண்ணாமலையில் செயல்பாடுகள் குறித்து மாத இதழ் ஒன்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவனிடம் கேள்வியை முன் வைத்துள்ளது அதற்கு அவர் அளித்துள்ள பதில் அண்ணாமலையை கடுமையாக விமர்சிக்கும் வகையில் உள்ளது. மாநில அரசுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் இடதுசாரிகள் முன்னெடுக்கும் போராட்டம் குறைந்து விட்ட சூழ்நிலையில், பாஜக பிரதான எதிர்க்கட்சி போன்ற  தோற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அதன் செயல்பாடுகள் இருக்கின்றவே என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள திருமாவளவன்,

பாஜகவை பொறுத்தவரையில் எதிர்க்கட்சியாக அதிமுக இருந்தாலும் நாங்கள்தான் பிரதான எதிர்க்கட்சி, அதிமுகவுக்கு மாற்று நாங்கள்தான் என்று காட்டிக் கொள்வதற்காக பல வேலைகளை செய்து வருகிறது. அதிமுகவுக்கு மாற்று எதிர்க்கட்சி நாங்கள்தான் என்ற காட்டும் பதற்றத்தில் அரைவேக்காட்டு தனமான அரசியலை பாஜக தலைவர் அண்ணாமலை செய்து கொண்டிருக்கிறார். அண்ணாமலை செய்யும் அரசியல் திமுகவுக்கு எதிரானது அல்ல அது அதிமுகவுக்கு எதிரானது. இவ்வாறு திருமாவளவன் விமர்சித்துள்ளார். 
 

click me!