
சட்டப்பேரவை கூட்டம் நாளை தொடங்கி ஜனவரி 12 வரை நடைபெறும் கூட்டத்தொடர் நடைபெறும் அனைத்து நாட்களும் கேள்வி நேரம் இருக்கும் எனவும் சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.
ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது. இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது, தமிழகத்தின் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து உரையாற்றினார். ஆளுநரின் இந்த பேச்சுக்கு திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவை கூட்டத்தொடரை தொடர்ந்து சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் 17 உறுப்பினர்களில் துரைமுருகனை தவிர மீதமுள்ள 16 பேர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் தனபால், சட்டப்பேரவை கூட்டம் நாளை தொடங்கி ஜனவரி 12 வரை நடைபெறும் கூட்டத்தொடர் நடைபெறும் அனைத்து நாட்களும் கேள்வி நேரம் இருக்கும் எனவும் தெரிவித்தார்.
நாளை தொடங்கியதும், ஒகி புயல் பாதிப்பால் உயிரிழந்தவர்களுக்கும் மரணமடைந்த அதிகாரிகளுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும் எனவும் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், வழம்போல் காலை 10 மணிக்கு கூட்டத்தொடர் தொடங்கும் எனவும் ஜனவரி 12 ஆம் தேதி ஆண்டின் முதல் துணை நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளித்தல், 13 ஆளுநருக்கு பதில் உரை , மானியக்கோரிக்கைகள் விவாதம் , ஆய்வு செய்தல், உள்ளிட்டவை நடைபெறும் எனவும் தெரிவித்தார்.