மத்திய அரசின் கிளை நிறுவனமாக அதிமுக செயல்பட்டு வருவதாகவும் தர்மயுத்தம் என்பது பதவிக்காக நடந்ததாகவும், பன்னீர்செல்வத்தின் உறவினர்களே தற்போது பதவியில் உள்ளனர் எனவும் டிடிவி குற்றம் சாட்டியுள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளுக்கு இடையே சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 40, 000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட தினகரன் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு சாதித்து காட்டினார்.பின்னர் புதிய கட்சி தொடங்கலாம் என முடிவெடுத்தார். ஆனால் டிடிவி ஆதரவாளர்கள் அதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. பின்னர் பேரவை தொடங்கலாமா என திட்டம் தீட்டுவதாக கூறப்பட்டது. இதைதொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை நிலை நிறுத்தி கொள்ள டிடிவி படாத பாடுபட்டு வருகிறார். இதனிடையே தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களின் வழக்கில் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் எடப்பாடி சற்று கலக்கத்தில் உள்ளார் என்றே கூறப்படுகிறது. தீர்ப்பு சாதகமாக வந்தால் எடப்பாடி தரப்பில் இருக்கும் குறிப்பிட்ட ஒரு 5 பேரை மட்டும் ஓரங்கட்டுவோம் என டிடிவி தரப்பினர் கூறி வருகின்றனர். இந்நிலையில், மத்திய அரசின் கிளை நிறுவனமாக அதிமுக செயல்பட்டு வருவதாகவும் தர்மயுத்தம் என்பது பதவிக்காக நடந்ததாகவும், பன்னீர்செல்வத்தின் உறவினர்களே தற்போது பதவியில் உள்ளனர் எனவும் டிடிவி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு மற்றும் திமுக தொடர்ந்த வழக்குகளின் தீர்ப்புக்கு பின் ஆட்சி மாறும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.