ஓபிஎஸ் கைவிட்டதால், அதிருப்தியில் உள்ள அதிமுக எம்பி மைத்ரேயன், பாஜகவுக்கு செல்வதா, டிடிவி தினகரன் அணிக்குச் செல்வதா என்ற குழப்பத்தில் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு முதல்வர் பதவியை ஏற்றவர் ஓ.பன்னீர்செல்வம். அவரை ராஜினாமா செய்யச் சொன்னதால், அதிமுகவை இரண்டாக உடைத்தார்.அப்போது ஒபிஎஸ்க்கு முதலில் ஆதரவு கொடுத்த எம்.பி மைத்ரேயன் ஆவார். இதனால் பன்னீர்செல்வம் மைத்ரேயனுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளராகவும் நியமித்தார். இதைதொடர்ந்து இபிஎஸ் ஒபிஎஸ் அணிகள் ஒன்றாக இணைந்ததும் பன்னீர்செல்வத்திற்கு எடப்பாடி அணியில் முக்கியத்துவம் தராததால் மைத்ரேயன் வருத்தத்தில் இருந்தார். மோடியும் எடப்பாடியுடன் ஒத்து போகுமாறு கைவிரிக்கவே அமைதியான பன்னீர். இதனால் மைத்ரேயன் தனது முகநூல் பக்கத்தில் அணிகள் இணைந்துவிட்டன. ஆனால் மனங்கள்? என கேள்வி எழுப்பியிருந்தார். இதனால் இருவருமிடையே கருத்து வேறுபாடுகள் இருப்பது உண்மை என அனைவராலும் உறுதிசெய்யப்பட்டது. ஆனால் மோடி சப்போர்ட் எடப்பாடிக்கு இருக்கவே பன்னீர் விட்டுக்கொடுத்து செல்ல ஆரம்பித்தார். இந்நிலையில், தற்போது ஒபிஎஸ் மைத்ரேயனை கண்டு கொள்ளாமல் விட்டதால் அதிமுகவில் இருந்து வெளியேறி பாஜக பக்கம் செல்வதா அல்லது டிடிவி பக்கம் செல்வதா என்ற குழப்பத்தில் இருக்கிறார் மைத்ரேயன் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் எடப்பாடியும் பன்னீரும் அதிர்ச்சியில் இருக்கிறார்களாம்.