அரசு பொருட்களை பெற அதிமுக உறுப்பினர் அட்டை வேண்டும் என தான் கூறவில்லை எனவும் பழைய உறுப்பினர் அட்டைகளை புதுபிக்க வேண்டும், புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றுதான் கூறினேன் எனவும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு விளக்கம் அளித்துள்ளார். தமிழக அமைச்சர்களில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவும் அவரின் திட்டங்களும் அகில உலக ஃபேமஸ் ஆனவை. வைகை அணையை தெர்மக்கோல் போட்டு அவர் மூடிய காட்சிகளை சீன நாட்டுப் பத்திரிகைகள்கூட புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டன.அதுமட்டுமல்லாமல், அடிக்கடி அரிய கருத்துகளைக் கூறி மக்களை சிந்திக்கவைப்பதோடு, சிரிக்கவும் வைப்பார். இதனால் எடப்பாடி தரப்பு ஒன்றும் கூற முடியாமல் விழி பிதுங்கி நிற்கிறது. ஏற்கனவே செல்லூர் ராஜு டிடிவி அணியின் ஸ்லீப்பர் செல் என அனைவராலும் சந்தேகிக்கப்பட்டு வரும் நிலையில் தாம் கோபப்பட்டால் அது உண்மையாகி விடுமோ என்ற தயக்கத்தில் இருக்கிறார்கள் போலும். இந்நிலையில் செல்லூர் ராஜு அரசு நிகழ்ச்சை ஒன்றில் மேலும் ஒரு சர்ச்சை பேச்சை அவிழ்த்து விட்டுள்ளார். அதாவது மதுரை மாவட்ட அதிமுக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கலந்துக்கொண்டார். அப்போது, பேசிய அவர், அதிமுக உறுப்பினர் அட்டை இருந்தால்தான் அரசு உதவிகள் பெற முடியும் என தெரிவித்தார். இதைதொடர்ந்து எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சிக்க தொடங்கினர். இதனால் எடப்பாடிக்கு கூடுதல் தலைவலி ஆரம்பித்தது. இந்நிலையில் நான் ஏற்படுத்திய பிரச்சனைக்கு நானே தீர்வு காண்கிறேன் என்கிற விதத்தில் செல்லூர் ராஜு விளக்கம் அளித்துள்ளார். அதாவது, அரசு பொருட்களை பெற அதிமுக உறுப்பினர் அட்டை வேண்டும் என தான் கூறவில்லை எனவும் பழைய உறுப்பினர் அட்டைகளை புதுபிக்க வேண்டும், புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றுதான் கூறினேன் எனவும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு விளக்கம் அளித்துள்ளார்.