80 கோடி மதிப்புள்ள சொத்தை கோயிலுக்கு எழுதிகொடுத்த நடிகை.. இந்த காலத்திலும் இப்படி ஒரு நடிகையா.?

By Ezhilarasan BabuFirst Published Feb 13, 2021, 12:22 PM IST
Highlights

ஆந்திராவில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னை தி.நகரில் திருப்பதி வெங்கடாஜலபதி ஆலயம் பிரசித்தி பெற்றது. அதேபோலவே பத்மாவதி அம்மையாருக்கும் கோயில் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. 

ஆந்திராவில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னை தி.நகரில் திருப்பதி வெங்கடாஜலபதி ஆலயம் பிரசித்தி பெற்றது. அதேபோலவே பத்மாவதி அம்மையாருக்கும் கோயில் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்காக பழம் பெரும் நடிகை காஞ்சனாவிற்கு சொந்தமான தி.நகர், ஜி.என்.செட்டி சாலையில் உள்ள 40 கோடி மதிப்பிலான இடத்தை தானமாக வழங்கியுள்ளார். இந்த இடத்தில் மொத்தம் 14,880 சதுர அடியில் 6.85 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோயில் கட்டப்பட உள்ளது. ராஜகோபுரம், பிரகாரம், முகாம் மண்டபம் என கோயில் பிரமாண்டபமாக கட்டப்பட உள்ளது.  

கோயில் கட்டுமான பணிக்கான பணம், திருப்பதி தேவஸ்தான விதிகளின்படி நன்கொடையாக பெறப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காஞ்சி காமக்கோடி சங்கராச்சாரியார், திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பா, செயல் அலுவலர் ஜவஹர் ஐஏஎஸ், சேகர் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆந்திரா அரசின் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் தலா ஒரு பசு வழங்கும் திட்டத்தின் ஒருபகுதியாக 8 கோவில்களுக்கு பசுவும் கன்றும் வழங்கப்பட்டது. 

நடிகை காஞ்சன 80 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை திருப்பதி ஏழுமலையானுக்கு ஏற்கெனவே எழுதி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சேகர் ரெட்டி கூறுகையில், "திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருக்கோவில் அமைப்பதற்கு தமிழக அரசு சார்பில் இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஓஎம்ஆர், ஈசிஆர் ஆகியோர் இடங்கள் தமிழக அரசால் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அதில் எந்த இடம் போக்குவரத்து நெரிசல் இல்லாமல், தேவஸ்தானத்திற்கு தோதுவாக உள்ளதோ அந்த இடத்தில் தேவஸ்தானம் கட்டியெழுப்பப்படும்", என்றார்.
 

click me!