விவசாயிகள் போரட்ட விவகாரத்தில் மோடியின் ஜனநாயக பாதை. இந்திய அரசை பாராட்டிய கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ..

Published : Feb 13, 2021, 12:01 PM IST
விவசாயிகள் போரட்ட விவகாரத்தில் மோடியின் ஜனநாயக பாதை. இந்திய அரசை பாராட்டிய கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ..

சுருக்கம்

விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்தை சமாளிக்க அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்ற பாதையை இந்திய அரசு தேர்ந்தெடுத்திருக்கும் இந்த ஜனநாயக முயற்சியை வரவேற்பதாகவும், இந்திய அரசு ஜனநாயகப் பாதையில் நடப்பதை பாராட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.  

விவசாயிகள் போராட்டத்தை சமாளிக்க அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்திய அரசு எடுத்துவரும் ஐனநாயகபூர்வ நடவடிக்கைகளை கன்னட பிரதமர்  ஜஸ்டின் ட்ரூடோ பாராட்டியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆரம்பத்தில் இந்திய அரசை கடுமையாக விமர்சித்த அவர் தற்போது தன்னுடைய நிலைப்பாட்டை  மாற்றிக் கொண்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது. 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள்  டெல்லி எல்லையை முற்றுகையிட்டு கடந்த 90 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். கடந்த குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையில் முடிந்தது, அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட  மோதல் சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து விவசாய சங்கங்களுக்கு ஆதரவாக வெளிநாட்டு பிரபலங்கள் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். பிரான்ஸ் நாட்டின் சுற்றுச்சூழல் ஆர்வலர் க்ரெட்டா தம்பர்க், பிரபல ஆபாச நடிகை மியா கலிபா உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்திய அரசுக்கு எதிராக கருத்து கூறி வருகின்றனர். 

இதற்கு இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், சர்வதேச அளவில் இந்தியாவின் நன் மதிப்புக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் சதி நடக்கிறது எனவும், இதுபோன்ற கருத்து கூறுபவர்களின் பின்னணியில் பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தான் தீவிரவாத இயக்கங்கள்  உள்ளன எனவும் இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. அதேபோல் சில சர்ச்சைக்குரிய இயக்கங்களிடம் இருந்து பணத்தை வாங்கிக் கொண்டு இந்தியாவுக்கு எதிராக டிவிட்டரில் கருத்து  பதிவிட்டதற்கான ஆதாரங்களும் வெளியாகியுள்ளன. இதேவேளையில் முன்னதாக இந்திய விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கன்னட நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டித்ததுடன் இந்திய அரசுக்கு எதிராக கருத்து கூறியிருந்தார். இது இந்தியா அரசுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் கனடா பிரதமர் இந்திய பிரதமர் மோடியுடனான தொலைபேசி உரையாடலின்போது, விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்தை சமாளிக்க அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்ற பாதையை இந்திய அரசு தேர்ந்தெடுத்திருக்கும் இந்த ஜனநாயக முயற்சியை வரவேற்பதாகவும், இந்திய அரசு ஜனநாயகப் பாதையில் நடப்பதை பாராட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் கொரோனா வைரஸ் நெருக்கடி உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்து அவர் மோடியுடன் தொலைபேசியில்  விவாதித்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்த தகவலை இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா செய்தியாளரிடம் பகிர்ந்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!