அதுவே ஒழுங்கா கொடுக்க முடியல... இதுல ஒருத்தர் ரூ.1000 இன்னொருவர் ரூ.1500.. டிடிவி தாறுமாறு விமர்சனம்..!

By vinoth kumarFirst Published Mar 9, 2021, 7:03 PM IST
Highlights

இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய், 1500 ரூபாய் என்று திமுக, அதிமுகவினரின் வாக்குறுதிகளைப் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் கேஸ் சிலிண்டர் விலையை குறைக்க முடியாமல், வருடத்துக்கு ஆறு கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக தருகிறேன் என்று சொல்வது மக்களை ஏமாற்றும் செயல். 
 
வரும் சட்டப்பேரவை தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்கர்களுக்கு பேட்டியளித்த டிடிவி தினகரன்;- உண்மையான தர்மயுத்தம் என்பது நாம் தேர்தலில் போட்டியிடுவதுதான். அது தொடங்கிவிட்டது. மக்களிடம் செல்ல இருக்கிறோம். வரும் 12ம் தேதி சென்னையில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. வேட்பாளர் அறிமுகக் கூட்டமாக இருக்கும். அதைத் தொடர்ந்து எனது தேர்தல் பிரச்சாரம் தொடங்கும். வர இருக்கும் தேர்தலில் நான் இரு தொகுதிகளில் நிற்பதாக இந்த நேரம் வரை முடிவு செய்துள்ளேன். ஆர்.கே.நகரிலும் போட்டியிடலாம் என்றார்.

இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய், 1500 ரூபாய் என்று திமுக, அதிமுகவினரின் வாக்குறுதிகளைப் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் கேஸ் சிலிண்டர் விலையை குறைக்க முடியாமல், வருடத்துக்கு ஆறு கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக தருகிறேன் என்று சொல்வது மக்களை ஏமாற்றும் செயல். 

ஏற்கனவே முதியோர் ஓய்வூதியத் தொகையையே ஒழுங்காக இந்த அரசால் கொடுக்க முடியவில்லை. இதில் அனைத்து பெண்களுக்கும் 1000 ரூபாய் என்று அவர் அறிவிக்கிறார். அதையடுத்து அனைத்து பெண்களுக்கும் 1500 என்று இவர்கள் அறிவிக்கிறார்கள். இலவசங்கள் என்ற பெயரில் மக்களை நாங்கள் ஏமாற்ற விரும்பவில்லை. மக்களே இதை உணர்ந்துகொள்வார்கள் என்று  டிடிவி. தினகரன் கூறியுள்ளார்.

click me!