தேமுதிகவால் நொந்துபோன வானதி சீனிவாசன்.. முடிவை மறு பரிசீலனை செய்ய கோரிக்கை..

By Ezhilarasan BabuFirst Published Mar 9, 2021, 5:57 PM IST
Highlights

தேமுதிக முடிவு வருத்தமளிக்கிறது எனவும், முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். சென்னை கோயம்பேடில் உள்ள பாஜக மாநில தேர்தல் அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். 

தேமுதிக முடிவு வருத்தமளிக்கிறது எனவும், முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். சென்னை கோயம்பேடில் உள்ள பாஜக மாநில தேர்தல் அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்:  

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக அறிவித்தது வருத்தமளிப்பதாகவும், மீண்டும் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதிமுகவும் இதனை பேசி தேமுதிகவை வெளியே செல்லாமல் செய்யவேண்டும், ஒவ்வொரு கட்சியும் அவர்களின் பலத்தின் அடிப்படையில் அவர்களுக்கான தொகுதிகளை  கேட்பது சகஜம் தான், பாஜக போட்டியிடும்  அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்,  எங்கள் கூட்டணி அரசு ஆட்சியமைக்க வேண்டும். 

கூட்டணியில் தொகுதிகள் கிட்டத்தட்ட இறுதியாகிவிட்டது.  ஒரிரு நாட்களில் அதன் விவரம் வெளியாகும். திமுகவுக்கு ஆதரவாக வரும் கருத்துகணிப்புகளை முழுமையாக ஏற்க முடியாது. அதிமுக  கூட்டணி வெற்றி பெரும் என்றும் சில நிறுவனங்கள் கருத்துகணிப்பு வெளியிடுகின்றன. குறுகிய காலத்தில் நடக்கும் தேர்தல் என்பது அரசியல் கட்சிகளுக்கு ஒரு பாடமாக இருக்கும், பெண்களின் பாதுகாப்பில் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகம் சிறந்த மாநிலம் தான், ஆனாலும் நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது. இதில் அரசுக்கு மட்டுமல்ல நமக்கும் பொறுப்புள்ளது. 

பெண்கள் எந்த நிலைக்கு சென்றாலும் சிலரின் பார்வையின் வக்கீரம் இருக்கும் என்பது ஐ.பி.எஸ் அதிகாரி சம்பவம் மூலம் தெரிகிறது.  பாதிக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு உடனடியாக நீதி கிடைக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

click me!