நான் என்றைக்குமே கோபாலபுரத்து காவல்காரன்.. சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜெகத்ரட்சகன்...!

Published : Mar 09, 2021, 05:38 PM IST
நான் என்றைக்குமே கோபாலபுரத்து காவல்காரன்.. சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜெகத்ரட்சகன்...!

சுருக்கம்

திமுகவில் முக்கிய பிரமுகராக உள்ள எம்.பி. ஜெகத்ரட்சகன் பாஜகவில் இணைய உள்ளதாக சமூக வலைதளங்களிலும் வெளியான செய்தி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திமுகவில் முக்கிய பிரமுகராக உள்ள எம்.பி. ஜெகத்ரட்சகன் பாஜகவில் இணைய உள்ளதாக சமூக வலைதளங்களிலும் வெளியான செய்தி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- நேற்று முதல் சில சமூக வலைதளங்களில் சில தவறான செய்திகள் என்னை பற்றி பரப்பப்படுகிறது. எங்கள் கழகத் தலைவரும் குடும்ப தலைவருமாகிய தளபதி அவர்களை முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக அல்லும் பகலும் உழைத்துக் கொண்டிருக்கிறேன்.

இன்று காலை கழக தலைவர் தளபதிகள் கட்டளையை சிரமேற்கொண்டு புதுவை மாநில சட்டமன்ற தேர்தல் குறித்து எங்கள் தோழமைக் கட்சியான காங்கிரஸ் உடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு இருந்தேன்

என் மீது சமூக வலைதளங்களில் வருகின்ற தவறான செய்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இதுகுறித்து சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளேன். நான் என்றைக்கும் கோபாலபுரத்து காவல்காரன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

தேர்தல் ஆணையத்தை ஏமாற்றிய அன்புமணி..! டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு..! ஆதாரத்தை காட்டி பாமக அருள்..!
மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!