5 மாநில தேர்தல், பிரதமரின் பிரச்சாரத்திற்கு தடைவிதிக்க கோரிய வழக்கு.. உச்சநீதி மன்றம் தள்ளுபடி.

Published : Mar 09, 2021, 04:39 PM IST
5 மாநில தேர்தல்,  பிரதமரின் பிரச்சாரத்திற்கு தடைவிதிக்க கோரிய வழக்கு..  உச்சநீதி மன்றம் தள்ளுபடி.

சுருக்கம்

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட மனுவை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்தது. மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலை 8 கட்டங்களாக நடத்தும் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக வைக்கப்பட்ட கோரிக்கையையும் உச்சநீதி மன்றம்  நிராகரித்தது.  

5 மாநில தேர்தலை ரத்து செய்ய கோரிய வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது.  தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம் மற்றும் அசாம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி கடந்த கடந்த 5ம் தேதி வழக்கறிஞர் எம்.எல் சர்மா உச்சநீதிமன்றதில் பொதுநல மனு தாக்கல் செய்தார். 

வழக்கில், தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைக்கான பதவிக்காலம் முடிவடைந்த பிறகே தேர்தல் நடத்த வேண்டும் எனவும், பிரதமர் நாட்டின் பொதுவனவர் என்பதால் தேர்தல் பிரச்சார பரப்புரையில் ஈடுபட பிரதமருக்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதேபோல, மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலை 8 கட்டங்களாக நடத்தும் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் முடிவையும் ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

இவ்வழக்கானது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்ட்டே அமர்வு( 1/8 ) முன்பு இன்று காலை 10.30 மணிக்கு மேல் விசாரணைக்கு வந்தது. தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்திய தேர்தல் ஆணையமும், அரசியல் கட்சிகளும் செய்துள்ள நிலையில் இவ்வாறு உத்தரவிட முடியாது என நீதிபதி மறுத்ததுடன் இந்த வழக்கை முடித்து வைத்தார்.  

PREV
click me!

Recommended Stories

Premalatha Vijayakanth: அட்ரா சக்க... கூட்டணியில் இருந்தாலும் திமுக ஆட்சியின் தவறை சுட்டிக்காட்டிய பிரேமலதா!
திமுக ஆட்சியில் 1 லட்சம் கோடி ஊழல் நடந்திருக்கு! - ஆதவ் அர்ஜுனா பகீர் குற்றச்சாட்டு