போலியாகக் போடப்பட்டதா விஜயகாந்தின் கையெழுத்து..? சந்தேகம் கிளப்பும் எஸ்.வி.சேகர்..!

By Thiraviaraj RMFirst Published Mar 9, 2021, 5:13 PM IST
Highlights

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியதாக அறிவிக்கப்பட்டு விஜயகாந்தின் கையொப்பத்துடன் லெட்டர்பேட் வெளியானது. அதில் இடப்பட்டுள்ள கையொப்பம் விஜயகாந்தின் உடையது அல்ல என நடிகரும், அரசியல் விமர்சகருமான எஸ்.வி.சேகர் சந்தேகம் எழுப்பி இருக்கிறார்.

இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், ‘’கேப்டன் கை எழுத்து கிராப் கீழ் நோக்கி இறங்கியிருக்கே.  இன்னும் சற்று பொறுமை காத்திருக்கலாம். இவ்வளவு ஆவேசம் தேவையில்லை. ஆனால் விஜயகாந்த் ஒரு வார்த்தை கூட பேசவில்லையே’’ என பதிவிட்டுள்ளார். இதற்கு கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன்கள், கீழ்க்கண்டவாறு பதிவிட்டு வருகின்றனர்’

அது கையெழுத்தே இல்லை. அது கையெழுத்தின் stamp pad copy.
கையெழுத்து போடும் நிலையில் கூட அவர் இல்லை போல பாவம்.
Feel very sad about your health vijayakanth sir.

— THALAIVARS SOLDIER (@sureshkumaar77)

கையெழுத்து இல்லை. கையெழுத்தை ரப்பர் ஸ்டாம்ப் செய்து முத்திரை தான் வைத்துள்ளனர்.

— Mothilal (@BJPian2)

click me!