வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு குறித்து கேள்வி... விழிந்த கமல்... விளக்கம் கொடுத்த சரத்குமார்...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 9, 2021, 6:32 PM IST
Highlights

தேமுதிக மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இணைய வேண்டுமென பொன்ராஜ் அழைப்பு விடுத்துள்ளதாக நானே செய்திகளில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன். 

மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ரவி பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இணைந்துள்ளது அனைவரும் அறிந்ததே. கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாகவும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி ஆகியவற்றுக்கு, தலா 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இன்று மூன்று கட்சிகளிடையிலான ஒப்பந்தம் கையெழுத்தானது. 


  

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில், கமல்ஹாசன், சரத்குமார், ரவி பச்சமுத்து, ராதிகா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மூன்று கட்சிகளின் தலைவர்களும் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். தங்கள் கூட்டணிக்கு  ‘முதல் கூட்டணி’ என அழைக்க வேண்டும் என தெரிவித்தனர். மநீம கூட்டணியில் தேமுதி இணைய வந்தால் ஏற்பீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த கமல், யார் வந்தாலும் அவர்களை அரவணைக்க வேண்டியது எங்கள் கடமை. இது மக்களுக்காக வந்திருக்கும் முதல் அணி, முன்னணி எனக்கூறினார்.

 

தேமுதிக மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இணைய வேண்டுமென பொன்ராஜ் அழைப்பு விடுத்துள்ளதாக நானே செய்திகளில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன். அதுகுறித்து அவர் ஆலோசனை செய்து கொண்டிருக்கிறார் எனத் தெரிவித்தார். அப்போது வன்னியர்களுக்கு 10.5% இட இதுக்கீடு குறித்து உங்களுடைய கருத்து என்ன என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கமல் பதிலளிக்க சற்றே தயங்கிய படி இருக்க அவரிடம் இருந்து மைக்கை வாங்கிய சரத்குமார், உச்ச நீதிமன்றம் 50 சதவீதத்திற்கு மேல் ஒதுக்கீடு கொடுக்க கூடாது என கூறியுள்ள நிலையில், தமிழகத்தில் 69%  ஒதுக்கீடு இருக்கிறது. சாதி வாரி கணக்கெடுப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி குலசேகரன் தலைமையிலான ஆணையம் புள்ளி விவரங்களை சேகரித்த பின்னர் 10.5 சதவீதம் கொடுத்தது சரியா? தவறா? என தெரியவரும் என பதிலளித்தார். 

அதன் பின்னர் சரத்குமாரிடம் இருந்து மைக்கை வாங்கிய கமல் ஹாசன்,  “வங்கியில் இருப்பு இருந்தால் தான் செக் எழுதனும், இல்லை என்றால் செக் பவுன்ஸ் ஆகிவிடும்” என சுருக்கமாக பதிலளித்து பேட்டியை முடித்துக்கொண்டார். 

click me!