ஓபிஎஸ் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்கள்..! நிராகரித்த பொதுக்குழு- அதிர்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் ஆதரவாளர்கள்

By Ajmal Khan  |  First Published Jun 23, 2022, 12:20 PM IST

அதிமுக பொதுக்குழு கூட்டம் பரபரப்பாக நடைபெற்ற நிலையில் ஓ.பன்னீர் செல்வம் கொண்டுவந்த 23 தீர்மானங்களையும் நிராகரிப்பதாக பொதுக்குழுவில் முன்னாள் அமைச்சர்கள். சி.வி.சண்முகம் மற்றும் கே.பி.முனுசாமி கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.


ஒற்றை தலைமை விவகாரம் அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பொதுக்குழு கூட்டம் காலை 11.30 மணியளவில் தொடங்கியது. அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்காக மேடைக்கு வந்த ஓபிஎஸ் உள்ளிட்ட அவரது ஆதரவு நிர்வாகிகளுக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர். கூட்டம் தொடங்குவதற்கு ஒரு மணி நேர்த்திற்கு முன்னதாக ஓபிஎஸ் அரங்கத்திற்கு வந்துவிட்டார். ஆனால் மேடைக்கு வரவில்லை, இருந்த போதும் அதிமுக நிர்வாகிகள் கடும் கூச்சல் எழுப்பினர். அப்போது பேசிய முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி மற்றும் வைகை செல்வன் ஆகியோர் பொதுக்குழு உறுப்பினர்கள் அமைதி காக்கும் படி கோரிக்கை வைத்தார்.

Tap to resize

Latest Videos

இதனையடுத்து சரியாக 11.30 மணியளவில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் அரங்கத்திற்கு தொண்டர்களின் உற்சாக குரல்களுக்கு மத்தியில் எடப்பாடி பழனிசாமி உள்ளே நுழைந்தார். அவரை முன்னாள் அமைச்சர்கள், அதிமுக மூத்த நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதனையடுத்து மேடை ஏறிய இபிஎஸ், ஓபிஎஸ்க்கு வணக்கம் செலுத்தினார்.ஆனால் இருவரும் வேறு எதுவும் பேசிக்கொள்ளவில்லை, அப்போது தொண்டர்கள் ஓபிஎஸ் கூட்டத்தில் இருந்து வெளியே செல்ல வேண்டும் என தொடர் முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து மேடையில் இருந்த மைக்கில் ஆவேசமாக பேசிய சி.வி.சண்முகம் 23 தீர்மானங்களையும் நிராகரிப்பதாக கூறினார். தொடர்ந்து பேசிய கே.பி.முனுசாமியும் இதே கருத்தை தெரிவித்தார். இதனால் பொதுக்கு.அரங்கம் பரபரப்பாக காணப்பட்டது.

இதையும் படியுங்கள்

பொதுக் குழுவில் இருந்து வெளியே செல்லுங்கள்..! அரங்கிற்கு வந்த ஓபிஎஸ்க்கு எதிர்ப்புத் தெரிவித்த உறுப்பினர்கள்

click me!