எனக்காக விதிகளை தளர்த்திய மோடி- அமித்ஷாவுக்கு நன்றி... எடியூரப்பா நெகிழ்ச்சி..!

By Thiraviaraj RMFirst Published Jul 27, 2021, 6:33 PM IST
Highlights

இருந்த போதும் எடியூரப்பாவுக்காக விதிகள் தளர்த்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆட்சியில் இருக்க பாஜக மேலிடம் அனுமதி அளித்தது.

பாஜக ஆட்சி அமைத்த இரண்டாவது வருடம் அதே நாள் தனது பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா. 75 வயதுக்கு மேலானவர்கள் முதல்வர் பதவியில் இருக்கக்கூடாது என்கிற விதி பாஜகவில் இருக்கிறது. இருந்த போதும் எடியூரப்பாவுக்காக விதிகள் தளர்த்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆட்சியில் இருக்க பாஜக மேலிடம் அனுமதி அளித்தது. இருப்பினும் கண்ணீர் மல்கவே பதவி விலகினார். 

தற்போது இரண்டாண்டுகள் முடிவடையும் தருவாயில், கடந்த ஜூலை 16-ம் நாள் பிரதமர் மோடி, அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருடன் எடியூரப்பா ஆலோசனை மேற்கொண்டார்.

இந்தநிலையில், கர்நாடக முதல்வராக எடியூரப்பா ஆட்சி அமைத்து, இன்று 2021, ஜூலை 26-ம் தேதியுடன் சரியாக இரண்டாண்டுகள் முடிவடைந்த நிலையில் ராஜினாமா செய்திருக்கிறார்.

கர்நாடக ஆளுநர் தவார் சந்த் கெலாட்டிடம் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்த பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்த எடியூரப்பா, “முதல்வர் பதவியிலிருந்து நான் விலக வேண்டும் எனக் கட்சித் தலைமை எனக்கு எந்த அழுத்தமும் தரவில்லை. இரண்டு ஆண்டுகளில் பதவியை ராஜினாமா செய்வேன் என்று நான் கொடுத்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறேன். நான் இரண்டாண்டுகள் முதல்வராகப் பதவி வகிக்க வாய்ப்பளித்ததற்காக பிரதமர் மோடி, அமித் ஷா, ஜே.பி.நட்டா ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறினார்.
 

click me!