இசைஞானி இளையராஜாவுக்கு சாதி கொடுமை.. நடிகர், இயக்குனர் மீது டிஜபி அலுவலகத்தில் புகார்.

Published : Jul 27, 2021, 04:59 PM ISTUpdated : Jul 27, 2021, 05:10 PM IST
இசைஞானி இளையராஜாவுக்கு சாதி கொடுமை.. நடிகர், இயக்குனர் மீது டிஜபி அலுவலகத்தில் புகார்.

சுருக்கம்

இந்த பேட்டியில் ரத்னகுமார் என்பவர் இசைஞானி இளையராஜாவை அவரது சாதியை மையமாக வைத்து இழிவாக பேசினார். அதை சித்ரா லட்சுமணனும் அனுமதித்ததாக அவர் கூறினார்.  

இசையமைப்பாளர் இளையராஜா குறித்து  இழிவாக பேசியதாக திரைப்பட இயக்குனர் ரத்னகுமார் மற்றும் நடிகர் சித்ரா லட்சுமணன் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்ககோரி மீண்டும் காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் புகார் கெடுக்கப்பட்டுள்ளது.  அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் செயல் தலைவர் இளமுருகு முத்து என்பவர் தமிழக காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இளமுருகு, கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் சித்ரா லட்சுமணன் தான் நடத்தும் "Chai with chithra" என்ற யூ டியூப் சேனல் நிகழ்ச்சியில் திரைப்பட கதாசிரியரும் இயக்குனருமான ரத்னகுமாரை வைத்து பேட்டி எடுத்தார். இந்த பேட்டியில் ரத்னகுமார் என்பவர் இசைஞானி இளையராஜாவை அவரது சாதியை மையமாக வைத்து இழிவாக பேசினார். அதை சித்ரா லட்சுமணனும் அனுமதித்ததாக அவர் கூறினார்.

இது தொடர்பாக மார்ச் மாதம் ரத்னா குமார் மற்றும் சித்ரா லட்சுமணன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் கொடுத்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, அதனால் மீண்டும் இன்று புகார் அளித்துள்ளதாக அவர் கூறினார். இழிவாக பேசிய வீடியோவை அவர்களே யூடியூப்பில் இருந்து நீக்கிவிட்டதாகவும், ஆதாரங்களை மறைத்தாலும் குற்றம் தான் என கூறிய அவர், புதிய டிஜிபி இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

 

PREV
click me!

Recommended Stories

நாளுக்கு நாள் தரம் தாழ்ந்து கேவலமாக பேசும் ஆர்.எஸ் பாரதி..! எச்.ராஜா சாப்பிட்ட எச்சை இலையில் உருள்வாராஇபிஎஸ் ..? என மோசமான கேள்வி
யூடியூபர் சவுக்கு சங்கர் கைது..! வீட்டின் கதவை உடைத்து காவல்துறை அதிரடி..!