டெல்லியில் மோடி வீட்டிற்கு செல்லும் மம்தா... கடும் மோதலுக்கு பிறகு முதல் சந்திப்பு..!

Published : Jul 27, 2021, 04:28 PM IST
டெல்லியில் மோடி வீட்டிற்கு செல்லும் மம்தா... கடும் மோதலுக்கு பிறகு முதல் சந்திப்பு..!

சுருக்கம்

வங்காள முதல்வர் முதல்முறையாக சந்திக்க உள்ளார். மம்தா பானர்ஜியும், மோடியும் முன்பு வரை கடுமையாக மோதிக்கொண்டனர்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி டெல்லியில் விரைவில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்திக்க உள்ளார். மேற்கு வங்க தேர்தலுக்குப் பிறகு பிரதமருடன், வங்காள முதல்வர் முதல்முறையாக சந்திக்க உள்ளார். மம்தா பானர்ஜியும், மோடியும் முன்பு வரை கடுமையாக மோதிக்கொண்டனர்.

இந்த சந்திப்பின்போது மம்தா பானர்ஜி, பிரதமரிடம் மாநிலத்திற்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டிய நிலுவைத் தொகையை விடுவிப்பதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.இன்று முன்னதாக, மம்தா பானர்ஜி, காங்கிரஸ் தலைவர் கமல்நாத்தை சந்தித்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடனான சந்திப்பும் மம்தா பானர்ஜி நிகழ்ச்சி நிரலில் உள்ளது. மூன்று நாள் டெல்லியில் தங்கும் பானர்ஜி எதிர்க்கட்சி தலைவர்களுடன் சந்திப்பார்.

சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரையும் மம்தா பானர்ஜி சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

PREV
click me!

Recommended Stories

தேர்தல் களத்தில் களைகட்டும் நம்ம ஊரு கலைகள்... பிரச்சாரத்தை தெறிக்கவிடும் கலைஞர்கள்!
BJP Plan: அண்ணாமலைக்கு ‘ரெஸ்ட்’ அல்ல... இது ஒரு பெரிய ‘புரமோஷன்’ - டெல்லி மேலிடத்தின் ரகசியத் திட்டம்!