
தமிழக சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ. தங்கத்தமிழ்செல்வன் பேசுகையில், சசிகலா மற்றும் தினகரனை புகழ்ந்து பேசியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று சுகாதாரத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வந்தது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர், பதிலளித்தார்.
இதற்குப் பிறகு, அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த டிடிவி தினகரன் ஆதரவாளரான ஆண்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ. தங்கத்தமிழ்ச்செல்வன் பேசினார்.
அப்போது, சசிகலா மற்றும் தினகரனை புகழ்ந்து பேசினார். சசிகலாவை சிற்றன்னை என்றும் தங்கத்தமிழ்செல்வன் கூறினார். குறிப்பாக கூவத்தூர் ஒற்றுமையால் மட்டுமே தமிழகத்தில் இதுவரை ஆட்சி நீடிப்பதாகவும் தங்கத்தமிழ்செல்வன் தெரிவித்தார்.
கூவத்தூர் விவகாரத்தில் எம்.எல்.ஏக்களை அடைத்து வைத்து அவர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுந்த்து.
தனக்கு கோடி கணக்கில் பணமும் நகையும் கொடுக்க வந்ததாக மதுரை தெற்கு எம்.எல்.ஏ சரவணன் கூறியிருந்த்து ஊடகங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது.
இன்றும் கூவத்தூர் விவகாரம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் இருந்து வருகிற நிலையில் கூவத்தூர் விவகாரத்தால் தான் என்று சட்டசபையில் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.