தங்கதமிழ்ச்செல்வனோடு உல்லாசமாக இருக்க சொன்னார்... கதிர்காமு பேசிய உல்லாச பேரம்! இளம் பெண் பகீர்...

Published : Apr 11, 2019, 09:07 PM ISTUpdated : Apr 11, 2019, 09:11 PM IST
தங்கதமிழ்ச்செல்வனோடு உல்லாசமாக இருக்க சொன்னார்... கதிர்காமு பேசிய உல்லாச பேரம்! இளம் பெண் பகீர்...

சுருக்கம்

அங்கு 3 எம்எல்ஏக்கள் இருந்தார்கள். அவர்களும் என் மீது ஆசைப்படுவதாக சொன்னார். என் மேல் தங்க தமிழ்ச்செல்வன் ரொம்பவும் ஆசைப்படுவதாகவும், அவரோடு நீ  உல்லாசமாக இருக்க வேண்டும் என சொன்னார் கதிர்காமு இளம் பெண் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.

அங்கு 3 எம்எல்ஏக்கள் இருந்தார்கள். அவர்களும் என் மீது ஆசைப்படுவதாக சொன்னார். என் மேல் தங்க தமிழ்ச்செல்வன் ரொம்பவும் ஆசைப்படுவதாகவும், அவரோடு நீ  உல்லாசமாக இருக்க வேண்டும் என சொன்னார் கதிர்காமு இளம் பெண் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.

கடந்த 3 தினங்களாக அமமுக பெரியகுளம் வேட்பாளர் கதிர்காமு சம்பந்தப்பட்ட விவகாரம் ஒன்று நடந்து வருகிறது. தன்னை கதிர்காமு பலாத்காரம் செய்துவிட்டார் என்று இளம் பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த பெண் பெரியகுளம் அருகே உள்ள சருத்துப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர்.

அந்த புகாரில் கதிர்காமுவின் காமலீலைகளை விவரித்துள்ளார்; எனக்கு முழங்கால் வலி இருந்தது. அதனால் கடந்த 14.10.2015-ம் தேதி தேனி அல்லி நகரத்தில் தனியார் ஆஸ்பத்திரி நடத்தி வந்த டாக்டர் கதிர்காமுவிடம் சென்றேன். அப்போது எனக்கு அவர் மயக்க ஊசி போட்டார். சிறிது நேரத்தில் நானும் மயக்கமானேன். அந்த சமயத்தில் டாக்டர் என்னை பலாத்காரம் செய்து அதை வீடியோ மற்றும் போட்டு எடுத்து வைத்துக்கொண்டார்.

மயக்கம் தெளிந்த நான் உடம்பில் துணியே இல்லாமல் கதிர்காமுவின் காமலீலைக்கு ஆளானதை தெரிந்துகொண்டேன். இதனையடுத்து அவர்கிட்ட நியாயம் கேட்க போனேன். அப்போது என்னுடைய ஆபாச வீடியோ, போட்டோ எடுத்து வைத்துள்ளதாக கூறினார். இதநாடுத்து திரும்பவும் ஆசைக்கு இணங்காவிட்டால், அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டினார். 

பலமுறை என்னை மிரட்டியே  உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். சம்பவம் நடந்த சில மாதங்களில் கதிர்காமு பெரியகுளம் தொகுதியில் அதிமுக எம்எல்ஏவாகி விட்டார். அதனால் அவரை எளிதாக அணுக முடியவில்லை. ஒருநாள் அவரிடம் பேசும்போது, எனது ஆபாச வீடியோ, போட்டோவை தந்துவிடுமாறு கெஞ்சினேன் ஆனால் கொடுக்கவில்லை. 

இதனையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் MLA ஆபீசுக்கு சென்று நியாயம் கேட்க சென்றேன். அங்கே மேலும் 3 எம்எல்ஏக்கள் இருந்தார்கள். அவர்களும் என் மீது ஆசைப்படுவதாக சொன்னார். என் மேல் தங்க தமிழ்ச்செல்வன் ரொம்பவும் ஆசைப்படுவதாகவும், அவரோடு நீ  உல்லாசமாக இருக்க வேண்டும் என சொன்னார். நான் மறுத்ததால் எனக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கு பற்றி உனக்கே தெரியும். இனிமேல் என்னை தொந்தரவு செய்தால் குடும்பத்துடன் கொளுத்தாமல் விடமாட்டேன் என்று மிரட்டினார். இவ்வாறு அவர் தனது புகார் மனுவில் கூறியிருந்தார். 

இந்த புகாரின்பேரில்தான் பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் தேனி மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!