ஜோதிமணியை நடுவழியில் கழற்றிவிட்ட செந்தில் பாலாஜி ! கதறும் காங்கிரஸ் !!

By Selvanayagam PFirst Published Apr 11, 2019, 8:38 PM IST
Highlights

கரூர் தொகுதி திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணிக்காக தீவிர பிரச்சாரத்தில்  ஈடுபட்டிருந்த அம்மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில் பாலாஜி  யாரிடமும் சொல்லாமல் திடீரென வேனில் இருந்து இறங்கி கிளம்பி விட்டார். இதனால் ஜோதிமணி உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைந்தனர்.

கரூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜோதிமணி போட்டியிடுகிறார். அவருக்கு அம்மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில் பாலாஜி பம்பரமாக சுழன்று பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில்தான் அரவக்குறிச்சி தொகுதிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.  அப்போது ஜோதிமணியுடன் பிரச்சாரத்தில் இருந்த  செந்தில்பாலாஜிக்கு . இந்த தகவல் தெரிந்ததும், பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கி  தனது காரில் ஏறி நேராக அரவக்குறிச்சிக்கு  சென்றுவிட்டார்

செந்தில் பாலாஜி அமமுகவில்  இருந்த போது போடப்பட்ட அலுவலகத்துக்கு போன செந்தில் பாலாஜியை அவரது ஆதரவாளர்கள் சால்வை போட்டு வரவேற்று இருக்கிறார்கள். அதன் பிறகு பள்ளப்பட்டிக்கு போன செந்தில்பாலாஜி அங்கே இருக்கும் சில நிர்வாகிகளை சந்தித்து இருக்கிறார். பள்ளப்பட்டியில் ஒரு மண்டபத்தை வாடகைக்குப் பிடிக்கச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினாராம். 

அதன் பிறகு கடந்த சில நாட்களாக ஜோதிமணியுடன் பிரச்சாரத்தில் பெரிதாக கலந்து கொள்ளாமல் அரவக்குறிச்சியில் நிர்வாகிகள் சந்திப்பில் தொடங்கி தனது தொகுதிக்கான வேலைகளில் மும்முரமாகிவிட்டார் 
.
செந்தில்பாலாஜி. திமுக நிர்வாகிகள் பலரும் செந்தில்பாலாஜி பின்னால் அரவக்குறிச்சிக்கு கிளம்பிவிட்டார்களாம். அரவக்குறிச்சி தொகுதிக்குள் ஜோதிமணி பிரச்சாரத்துக்கு வரும்போது மட்டும் அவருடன் வண்டியில் ஏறிக் கொள்கிறாராம் செந்தில்பாலாஜி.

அதுமட்டுமல்லாமல் இவ்வளவு நாளாக ஜோதிமணிக்கான செலவுகளை எல்லாம் கவனித்து வந்தது செந்தில்பாலாஜிதானாம். ஆனால், சில தினகங்களாக அதுவும் தடை பட்டிருக்கிறதாம். பார்த்து பார்த்து நொந்துபோன ஜோதிமணி இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியிடம் புகார் செய்திருக்கிறாராம். அழகிரியும் இந்த தகவலை திமுக தலைமையின் கவனத்துக்கு கொண்டு போயிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

click me!