
தேனி மக்களவை தொகுதியில் வேட்பாளராக களமிறங்கும் தனது மகனை வெற்றிபெற வைக்க ஓ.பி.எஸ் ஆயிரம் கோடி ரூபாயை வாக்காளர்களுக்கு கொடுக்க இருப்பதாக தேனி தொகுதி அமமுக வேட்பாளர் தங்க. தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் பிரசாரத்தின் போது பேசிய அவர், ’தேனி அதிமுக வேட்பாளருக்கு அரசியல் பக்குவமே இல்லை. அப்படித்தான் பேசி வருகிறார். எங்களை பார்த்து சுயேட்சை வேட்பாளர் என்று சொல்கிறார். ஆனால் இதுக்கெல்லாம் தேர்தல் முடிவில் பதிலடி தருவோம்.
ஓபிஎஸ் தன் மகனை எப்படியாவது வெற்றி பெற வைக்க வேண்டும் என்று ரூ.1000 கோடி வரை செலவு செய்யும் திட்டத்தில் இருக்கிறார். அதனால் பணம் பாதாளம் வரை பாய போகிறது. அதனால் நான் என்ன சொல்றேன், அவங்க எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்கிக்குங்க. ஆனால் ஓட்டு மட்டும் எங்களுக்கு போட்டுடுங்க.
வேடிக்கை நிறைய இடங்களில் தேர்தலில் வெற்றி பெற அதிமுகவினர் பணம் கொடுத்து கொண்டிருக்கிறார்கள். இதை தேர்தல் பணியில் உள்ள அதிகாரிகள், போலீசார் யாருமே கண்டு கொள்வது இல்லை. வேடிக்கைதான் பார்க்கிறார்கள். இது தொடர்பாக புகார் கூட அளித்திருக்கிறோம். தேர்தல் ஆணையம் புதுசா எங்களுக்கு தந்த சின்னத்தை மக்களிடம் வெற்றிகரமாக சேர்த்து விட்டோம். அதனால் வெற்றி எங்களுக்கு சாதகமாகவே இருக்க போகிறது" என அவர் தெரிவித்தார்.