மோடியின் அதிரடி திட்டம்..! அதிர்ந்து போன மம்தா..!

By ezhil mozhiFirst Published Apr 3, 2019, 1:56 PM IST
Highlights

நரேந்திர மோடி இன்று மேற்குவங்கத்தில் தனது பிரச்சார உரையை துவங்க உள்ளார். இதற்கு முன்னதாக நாளை மம்தா பேனர்ஜி பிரச்சார உரையை நிகழ்த்த இருந்த நிலையில் அவசர அவசரமாக இன்று பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.

நரேந்திர மோடி இன்று மேற்குவங்கத்தில் தனது பிரச்சார உரையை துவங்க உள்ளார். இதற்கு முன்னதாக நாளை மம்தா பேனர்ஜி பிரச்சார உரையை நிகழ்த்த இருந்த நிலையில் அவசர அவசரமாக இன்று பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.

பிரதமர் மோடி அருணாச்சலப் பிரதேசத்தில் இன்று பிரசாரத்தை முடித்துவிட்டு மாலையில் மேற்குவங்கத்தில் பிரச்சார உரையை நிகழ்த்த உள்ளார். முதற்கட்டமாக சிலிகிரி என்ற பகுதியிலும் அடுத்ததாக பிரிக்கெட் பரேட் என்ற இடத்திலும் பிரச்சாரம் செய்ய உள்ளார். இந்த பிரிக்கெட் மைதானத்தில் மோடி உரையைக் கேட்பதற்காக சுமார் 8 லட்சம் பேர் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதே மைதானத்தில்தான் மெகா கூட்டணி உருவாக்கப்பட்டு எதிர்க்கட்சிகளின் மெகா மாநாடு நடத்தப்பட்டது என்பது கூடுதல் தகவல். மேற்கு வங்கத்தை பொருத்தவரையில் 42 தொகுதிகளில் 20 தொகுதிகளை கைப்பற்ற பாஜக திட்டமிட்டு உள்ளது. தற்போது வரை பாஜகவிற்கு மேற்குவங்கத்தில் பெரிய ஆதரவு இல்லை என்றாலும் அதே சமயத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு சற்று குறைந்து வருவதால் அது பாஜகவிற்கு பலமாக மாறிவிடும் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

இதற்கிடையில் திரிணாமுல் காங்கிரஸ் பிரச்சாரத்தை தொடங்குமுன் மோடி முந்திக்கொண்டு இன்று பிரசாரம் தொடங்கிகிறார். அவ்வாறு தொடங்கினால் திரிணாமுல் காங்கிரஸ்கு மேலும் செல்வாக்கு குறைய வாய்ப்பு உள்ளது என எண்ணி மம்தா பானர்ஜி நாளை தொடங்க இருந்த பிரச்சாரத்தை இன்றே(ஏப்ரல் 3 ) தொடங்க ஆயத்தம் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!