அவரு பாஜகவில் சேரப்போறது உண்மை..உண்மை... ஒ.பன்னீர்செல்வத்தை சீண்டும் தேனி தங்கம்!

By Asianet TamilFirst Published May 2, 2019, 9:25 PM IST
Highlights

தேர்தல் தோல்வி பயத்தாலும் தனது சொத்தைப் பாதுகாக்கவும் ஓ.பன்னீர்செல்வம் பாஜகவில் இணைய உள்ளார். மோடி, அமித் ஷா, குருமூர்த்தி ஆகியோர் கூறுவதைக் கேட்டு அதிமுக பாஜகவின் ஓர் அங்கமாக செயல்பட்டுவருகிறது.

துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பாஜகவில் இணைவார் என்பது 100 சதவீத உண்மை என்று அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாரணாசி சென்றதிலிருந்து அவரைச் சுற்றி தமிழக அரசியல் களம் பரபரப்பாகி உள்ளது. ஓ.பன்னீர்செல்வம் பாஜகவில் சேருவார் என்ற கிளம்பிய செய்தியால் வந்த பரபரப்பு இது. இதை மறுத்து ஓ.பன்னீர்செல்வம் நீண்ட விளக்க அறிக்கையை நேற்று வெளியிட்டார்.

 
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கையை வைத்து அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க  தமிழ்ச்செல்வன் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில், “ஓ.பன்னீர்செல்வம் பாஜகவில் சேரப்போவது 100 சதவீத உண்மை” என்று தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.


“ஓ.பன்னீர்செல்வம் நிலைப்பாட்டில் உறுதித்தன்மை இல்லாதவர். பதவிக்காக எந்த நிலைக்கும் செல்லக்கூடியவர். இதைத்தான் அவருடைய அறிக்கைக் காட்டுகிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக கூடாது என்பதற்காக அதிமுகவுக்கு எதிராக வாக்களித்தவர் ஓபிஎஸ். அதிமுகவை ஊழல் ஆட்சி என விமர்சனம் செய்த ஓ.பன்னீர்செல்வம், அதே ஊழல் ஆட்சியில் துணை முதல்வர் பதவி வாங்கியது சந்தர்ப்பவாத அரசியல்.


ஓ.பன்னீர்செல்வத்தை வைத்து அதிமுகவை பாஜக இயக்கிவருகிறது. ஓ.பன்னீர்செல்வம் பாஜகவில் சேருவார் என்பது 100 சதவீத உண்மை. தேர்தல் தோல்வி பயத்தாலும் தனது சொத்தைப் பாதுகாக்கவும் ஓ.பன்னீர்செல்வம் பாஜகவில் இணைய உள்ளார். மோடி, அமித் ஷா, குருமூர்த்தி ஆகியோர் கூறுவதைக் கேட்டு அதிமுக பாஜகவின் ஓர் அங்கமாக செயல்பட்டுவருகிறது” என்று தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

click me!