கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் கட்டாயமா கருத்தடை பண்ண வேண்டும் !! அதிரடி ஐடியா கொடுத்த பெண் சாமியார் !!

Published : May 02, 2019, 09:11 PM IST
கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் கட்டாயமா கருத்தடை பண்ண வேண்டும் !! அதிரடி ஐடியா கொடுத்த பெண் சாமியார் !!

சுருக்கம்

இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் கட்டாய கருத்தடை செய்ய வேண்டும் என்று பெண் சாமியார் தேவ தாக்குர் அதிரடியாக ஐடியா கொடுத்துள்ளார்.

இந்து மகா சபை தலைவர்களில் ஒருவரான பெண் சாமியார் தேவ தாக்குர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது இந்துக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது; இதனைத் தடுக்க, முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு மத்திய அரசு கருத்தடை செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மேலும், “இந்துக்களின் மக்கள் தொகையை பெருக்க வேண்டும்; உலகிலேயே முதலிடத்தில் இந்துக்களின் மக்கள் தொகை இருக்க வேண்டும் என்று தனது  ஆசையை வெளிப்படுத்தியிருக்கும் தேவ தாக்குர், “நாதுராம் கோட்சேவுக்கு ஹரியானாவில் சிலை வைப்பதற்கு தனது ஆதரவு உண்டு” என்றும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பாபர் மசூதியை இடித்ததற்காக பெருமைப்படுகிறேன் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்திய பெண் சாமியார் பிரக்யா தாக்குருக்கு போபால் தொகுதி  பாஜக சீட் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

மதம் உண்மையில் பிரபஞ்சத்தின் அறிவியல்..! மோகன் பகவத் அசத்தல் விளக்கம்..!
திமுகவுக்கு பேரிடி... அதிமுகவுக்கு சவுக்கடி..! கூட்டணி பலமானால் விஜயே முதல்வர்..! அதிரடி சர்வே..!