
இபிஎஸ், ஓபிஎஸ் அணியினருக்குத்தான் இரட்டை இலை சின்னம் கிடைச்சிருச்சிலே… அப்புறம் ஏன் தினகரனுக்கு தொப்பி சின்னம் கொடுக்கக்கூடாது என அவங்க பதறுறாங்க… ஏன் தொப்பியைப் பார்த்த பயமா ? என டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக கட்சியும், இரடை இலை சின்னமும் தங்களுக்குத்தான் என இபிஎஸ் –ஓபிஎஸ் அணிக்கும், அதிமுக அம்மா அணிக்கும் இடையே கடும் மோதல் இருந்து வந்தது. இது தொடர்பாக இரு அணிகளும் தேர்தல் ஆணையத்தில் லட்சக்கணக்கான ஆவணங்களை தாக்கல் செய்திருந்தனர்.
டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் இபிஎஸ் - ஓபிஎஸ் அணிக்குத்தான் இரட்டை இலை சின்னம் என தீர்ப்பு வந்தது.
இது தொடர்பான அறிவிப்பு வந்த அடுத்த நாளே ஆர்.கே.நகருக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இடைத் தேர்தலில் தான் தொப்பி சின்னத்தில் போட்டியிடப்போவதாக தினகரன் தெரிவித்தார்.
ஆனால் தினகரனுக்கு தொப்பு சின்னம் வழங்கக்கூடாது என இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்செல்வன். இபிஎஸ், ஓபிஎஸ் அணியினருக்குத்தான் இரட்டை இலை சின்னம் கிடைச்சிருச்சிலே… அப்புறம் ஏன் தினகரனுக்கு தொப்பி சின்னம் கொடுக்கக்கூடாது என அவங்க பதறுறாங்க… ஏன் தொப்பியைப் பார்த்த பயமா ? என கேள்வி எழுப்பினார்.