சசி குடும்பத்தின் மீது ரவுண்டு கட்டிய ரெய்டு! தாறுமாறாக விளக்கம் சொன்ன தமிழிசை!

First Published Nov 9, 2017, 4:06 PM IST
Highlights
thamizhisai soundararajan pressmeet


சசிகலா உறவினர்கள் வீடு மற்றும் அலுவலங்களில் நடத்தப்படும் வருமானவரி சோதனைக்கு அரசியல் சாயம் பூசுவதாக தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், சென்னை, தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், வருமான வரித்துறையின் சோதனைக்கு அரசியல் சாயம் பூசுவதற்கு கண்டனம் தெரிவித்தார். 

தற்போது நடத்தப்படும் சோதனை, வருமான வரித்துறைக்கு கிடைத்த தகவல் கிடைத்ததன் பேரில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறினார். தங்களுக்கு சவாலாக அதிமுக தினகரன் அணியை கருதவில்லை என்றார். அதேபோல் வருமான வரி சோதனைக்கு பின்னால், பாரதிய ஜனதா கட்சி இல்லை என்றும் அவர் உறுதி தெரிவித்தார்.

ஓராண்டாகத்தான் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு சோதனைகள் தீவிரமாகியுள்ளன. வருமான வரித்துறைக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் மட்டுமே சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தினகரன் அணியை, அரசியல் ரீதியாக எதிர்கொள்ளக்கூடிய கட்சி என்பதை நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றார். 

தமிழகத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பது என்பது தலைகுனிவுதானே என்றும் அவர் கேள்விஎழுப்பினார். 1,800 அதிகாரிகள் சோதனை செய்யும் அளவிற்கு ஒரு குடும்பத்தில் சொத்து உள்ளதா?  நேர்மையாக இருந்தால் கணக்கு காட்டிவிட்டு போவதுதானே. பின்னர் ஏன் பதற்றப்பட வேண்டும். ரெய்டு நடத்துவது மட்டுமே கண்களுக்குத் தெரியும் அதன் பின் இருக்கும் பணி தெரியாது என்றார். உழைத்து சம்பாதித்த பணத்துக்கு கணக்கு காண்பிக்க வேண்டியதுதானே? என்று கேள்வி எழுப்பினார்.

வருமான வரி துறையை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் பிரதமர் மோடிக்கு இல்லை. ஆக்கப்பூர்வமான தகவல் வந்தால் வருமான வரித்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் தமிழிசை கூறினார்.

click me!