
’ஆபரேஷன் கிளீன் பிளாக் மனி’ என்ற பெயரில் சசிகலா உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு மேற்கொண்டுள்ளனர்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சசிகலாவின் உறவினர்கள் அனைவரது வீடுகளும் சோதனைக்கு ஆளாகியுள்ளது.
ஐதராபாத் கொச்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து 6 ஆணையர்கள் ரெய்டுக்கு வருகை தந்துள்ளனர். சசிகலா உறவினர்களுக்கு சொந்தமான 187 இடங்களில் வருமான வரித்துறை ஊழியர்கள் 1,800 பேர் சோதனை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரியில் உள்ள டிடிவி பண்ணை வீடு, சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள விவேக் ஜெயராமன் வீடு, தி.நகரில் உள்ள இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா வீடு, தாம்பரத்தில் உள்ள மிடாஸ் மதுபான ஆலை, தஞ்சாவூர் நடராஜன் வீடு, மன்னார்குடியில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் வீடு, நீடாமங்கலம் அருகே உள்ள திவாகரன் பண்ணை வீடு, செங்கமலத்தாயார் கல்லூரி ஊழியர் அன்பு ஜானகிராமன் வீடு, ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டிவி, ஜாஸ் சினிமா அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
சசிகலா உறவினர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடக்கும் இந்த ரெய்டுக்கு ’ஆபரேஷன் கிளீன் பிளாக் மனி’ என பெயர் வைத்துள்ளனர்.