ஜெயா டிவி, நமது எம்ஜிஆரை  பிடுங்க இப்படியா செய்யனும்? - கொந்தளிக்கும் கலைராஜன்...!

 
Published : Nov 09, 2017, 03:38 PM ISTUpdated : Sep 19, 2018, 01:25 AM IST
ஜெயா டிவி, நமது எம்ஜிஆரை  பிடுங்க இப்படியா செய்யனும்? - கொந்தளிக்கும் கலைராஜன்...!

சுருக்கம்

v p kalairajan explain about ttv home raid

எடப்பாடி தரப்பு நிறைவேற்றிய ஜெயா டிவி மற்றும் நமது எம்ஜிஆரை கைப்பற்றுவோம் என்ற தீர்மானத்தை செயல்படுத்தவே சசிகலா உறவினர்கள் வீட்டில் ரெய்டு நடப்பதாக டிடிவி ஆதரவாளர் வி.பி.கலைராஜன் தெரிவித்துள்ளார். 

எடப்பாடி தரப்பும் ஒபிஎஸ் தரப்பும் ஒன்றாக இணைந்த போது இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

அதில் ஒன்று சசிகலா மற்றும் டிடிவி தினகரனை கட்சியில் இருந்து வெளியேற்றுவது மற்றொன்று நமது எம்.ஜி.ஆரையும், ஜெயா டிவியையும் கைப்பற்றுவது. 

ஆனால் சசிகலா உறவினருக்கு சொந்தமான தனிநபர் நிறுவனத்தை அபகரிப்பதா என டிடிவி தரப்பு கடும் கண்டனம் தெரிவித்தது. 

இந்நிலையில், இன்று சசிகலா, டிடிவி தினகரன் உறவினர்கள் உள்ளிட்ட 187 இடங்களில் 1800 வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதில் ஜெயா டிவியும், நமது எம்.ஜி.ஆர் அலுவலகமும் அடங்கும். 

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் விசுவாசி வி.பி.கலைராஜன், எடப்பாடி தரப்பு நிறைவேற்றிய ஜெயா டிவி மற்றும் நமது எம்ஜிஆரை கைப்பற்றுவோம் என்ற தீர்மானத்தை செயல்படுத்தவே சசிகலா உறவினர்கள் வீட்டில் ரெய்டு நடப்பதாக தெரிவித்தார். 

இது ஒரு அராஜக போக்கு என்றும் மத்திய மாநில அரசுகள் சேர்ந்துதான் இதை செய்கின்றன எனவும் குறிப்பிட்டார். 

முட்டாள்கள் வாழும் நாட்டில் அறிவாளிகள் குடியிருக்க முடியாது என்பது போல மாநில அரசின் நடவடிக்கை இருக்கிறது என தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

ஒரு அரசன் வருவான்..! கிறிஸ்துமஸ் விழாவில் கடவுள் நம்பிக்கை..! திமுகவால் சுதாரித்த விஜய்..!
திமுகவை வீழ்த்தியே ஆகணும்..! அதிமுக கூட்டணிக்கு வருகிறது தவெக..? இபிஎஸ் சொன்ன முக்கிய தகவல்..!