பதவி போனாலும் பரவாயில்லை…பாஜக வேட்பாளர் ராம்நாத்திற்கு வாக்களிக்க முடியாது… தமிமுன் அன்சாரி நெத்தியடி பேட்டி…

 
Published : Jun 22, 2017, 06:36 AM ISTUpdated : Sep 19, 2018, 12:47 AM IST
பதவி போனாலும் பரவாயில்லை…பாஜக வேட்பாளர் ராம்நாத்திற்கு வாக்களிக்க முடியாது… தமிமுன் அன்சாரி நெத்தியடி பேட்டி…

சுருக்கம்

thamimun ansari press meet about ramnath govinth

அதிமுக அம்மா அணி பாஜக நிறுத்தியுள்ள  குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆதரிக்கப்போவதாக அறிவித்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாகவும், என்னுடைய பதவியே போனாலும் பரவாயில்லை பாஜக வேட்பாளருக்கு வாக்களிக்க மாட்டேன் என மனித நேய ஜனநாயக கட்சி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

நாகை தொகுதியில் அதிமுகவின் தோழமை கட்சியான மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தமிமுன் அன்சாரி. சட்டப் பேரவையைப் பொறுத்தவரை அவர் அதிமுக உறுப்பினர்தான். அதிமுக கொறடாவின் ஆணைகளுக்கு அவர் கட்டுப்பட்டே நடக்க வேண்டும்.

இந்த நிலையில் பாஜக அறிவித்துள்ள குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்தை ஆதரிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த தமிமுன் அன்சாரி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இந்த முடிவு தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

இப்பிரச்சனையில் அதிமுகவின் கொறடா உத்தரவிட்டாலும், பாஜக வேட்பாளருக்கு வாக்களிக்க மாட்டேன் என்று தெரிவித்த தமிமுன் அன்சாரி, இதனால் எனது பதவியே போனாலும் பரவாயில்லை என கூறினார்.

PREV
click me!

Recommended Stories

ஓரங்கட்டப்பட்ட ஓடி ஓடி வேலை செய்த அஜிதா அஃனஸ்..! தவெகவில் தடுத்து நிறுத்தப்பட்ட பெண் நிர்வாகி
41 பேரை கொன்று குவித்த நடிகர் விஜய் பின்னால் செல்வது ஏன்..? கிறிஸ்தவ மத முதல்வர் காட்வின் எதிர்ப்பு.. தவெக அதிர்ச்சி..!