பிரதமர் கேட்டுக்கொண்டதால் அணிகள் இணைந்தது என ஒபிஎஸ் கூறியதை அவர்கிட்டதான் நீங்க கேட்கணும் எனவும் பிரதமர் சில அறிவுரைகளை கூறியிருக்கலாம் எனவும் பாஜக மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தர்மயுத்தம் என்ற பெயரில் சசிகலாவை எதிர்த்து முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததோடு ,அதிமுகவிலிருந்து வெளியேறினார் ஓபிஎஸ். இதையடுத்து அக்கட்சி இரண்டாக உடைந்தது.இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக்கப்பட்டார். சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். இதைனையடுத்து ஓபிஎஸ்ம், இபிஎஸ்ம் இணைந்தனர். அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக சசிகலாவால் நியமிக்கப்பட்ட டி.டி.வி.தினகரன் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் தேனியில் நடைபெற்ற அதிமுக செயல் வீர்ர்கள் கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் ஓபிஎஸ் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதாலேயே அணிகளை இணைத்தேன் எனவும் எனக்கு பதவி ஆசை கிடையாது எனவும் தெரிவித்தார். மேலும் ஜெயலலிதா எல்லாவற்றையும் கொடுத்து விட்டார் எனவும் தெரிவித்தார். இதுகுறித்து இன்று தமிழிசை சவுந்திரராஜனிடம் கேட்டப்போது, பிரதமர் கேட்டுக்கொண்டதால் அணிகள் இணைந்தது என ஒபிஎஸ் கூறியதை அவர்கிட்டதான் நீங்க கேட்கணும் எனவும் பிரதமர் சில அறிவுரைகளை கூறியிருக்கலாம் எனவும் பாஜக மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.