
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை மக்கள் வரவேற்கிறார்கள் என்றும், ஆனால் அதனை கவிழ்த்துவிட்டு குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க ஸ்டாலின் முயற்சி செய்து வருகிறார் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக., வில் எந்த கருத்து வேறுபாடும், பிளவும் இல்லை என்றும் இரு அணியினரும் சகோதரர்கள் போலவே இருப்பதாக தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி – மோடி சந்திப்பு குறித்த ஸ்டாலின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த தம்பிதுரை , தமிழகத்தின் முதலமைச்சர் என்ற அடிப்படையிலேயேதான் எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்தித்ததாக தம்பிதுரை குறிப்பிட்டார்.
சட்டசபையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்தை உடனடியாக திறக்க வேண்டும் என கேட்டுக் கொண்ட தம்பிதுரை, தற்போது நடைபெற்று வரும் இந்த ஆட்சியை மக்கள் வரவேற்கிறார்கள் என தெரிவித்தார்.
அதே நேரத்தில் இந்த அரசை குறை கூறி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க நினைப்பதாக குற்றம்சாட்டினார்.