திமுகவுக்கு தேவை பாரத் ரத்னா தான் !! பாரத் பந்த் இல்ல !! செமையா கலாய்த்த தம்பிதுரை !!

Published : Sep 11, 2018, 07:36 AM ISTUpdated : Sep 19, 2018, 09:22 AM IST
திமுகவுக்கு தேவை பாரத் ரத்னா தான் !! பாரத் பந்த்  இல்ல !!  செமையா கலாய்த்த தம்பிதுரை !!

சுருக்கம்

திமுக – பாஜக இடையே கூட்டணி என்பது உறுதி என்றும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தற்போது திமுகவுக்கு வேண்டியது பாரத் ரத்னா தான் என்றும் பாரத் பந்த் என்பது அவர்களது இரட்டை வேடம் என்றும் குற்றம்சாட்டினார்

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி நேற்று இந்தியா முழுவதும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழக ஆளும் கட்சியான அதிமுக ஆதரவு தரவில்லை.

அதே நேத்தில் பெட்ரோல், டீசல் விலையை கடுமையாக உயர்த்தியதற்கு மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை, கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, மத்திய அரசு ஏழை-எளிய மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

திமுக இரட்டை வேடம் போடுவதாகவும், பாஜகவுடன் ரகசிய ஒப்பந்தம்  உள்ளதாகவும் குற்றம்சாட்டினார். தற்போது திமுகவுக்கு வேண்டியது பாரத் ரத்னா தான் என்றும் பாரத் பந்த் என்பது அவர்களது இரட்டை வேடம் என்றும் குற்றம்சாட்டினார்.

மறைத் கருணாநிதிக்கு பாரத் ரத்னா பட்டம் வாங்க வேண்டும் என்பதற்காக திமுக என்ன வேண்டுமானாலும்  செய்யும் என்றும் தம்பி துரை குறிப்பிட்டார்.

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!