7 பேர் விடுதலையை தடுக்க ராஜபக்சே, சு,சாமி சதி !! திடுக் அதிர்ச்சி தகவல் !!

By Selvanayagam PFirst Published Sep 11, 2018, 6:47 AM IST
Highlights

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக  அரசு தீவிர  நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இதனைத் தடுக்க இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவும், பாஜக எம்.பி.சுப்ரமணியன்சாமியும் சதி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் இந்திய ராணுவத்தின் உதவியுடன் விடுதலை புலிகள் அமைப்பை முற்றிலும் ஒழித்துக் கட்டியவர் ராஜபக்சே. ஆனால் அப்போது நடைபெற்ற போரில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டனர்.

இதையடுத்து தமிழர்கள் அனைவருக்கும் ராஜபக்சே என்றாலே ஒரு வெறுப்பு உணர்வுடனே உள்ளனர். ஆனால் பாஜக எம்.பி. சுப்ரமணியன்சாமியும் ராஜபக்சேவும் மிக நெருங்கிய நண்பர்கள்.

சு.சாமி திமுக, கருணாநிதி என்றாலே உக்கிரமாக தனது வெறுப்பைக் காட்டுவார். அண்மையில் மறைந்த  கருணாநிதிக்கு பாரத் ரத்னா பட்டம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுநதபோது அதற்கு சு.சாமி கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.

அப்போது செய்தியார்களிடம் பேசிய சு,சாமி, இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேவுக்கு பாரத் ரத்னா பட்டம் வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று திடீரென டெல்லி வந்த ராஜபக்சே சுப்ரமணியன்சாமியை சந்தித்துப் பேசினார். அவரை வரவேற்ற சு.சாமி அவருக்கு ஸ்பெஷல் விருந்தளித்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்பக்சே, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை  விடுதலை செய்வது என்பது இந்திய அரசியல் சட்டத்துக்கு உட்பட்டது என கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

அதே நேரத்தில்  ராஜிவ்  கொலை குற்றவாளிகள் 7 பேரையும் விடுவிக்க அரசு முயற்சி செய்து வரும் நிலையில் ராஜபக்சேவும், சுப்ரமணியன் சாமியும் பல முக்கிய தலைவர்களை சந்தித்து அவர்களி விடுதலை ஆவதை தடுக்க சதி செய்து வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

click me!