இந்த நாடுகளில் இருந்து வந்தால் சோதனை கட்டாயம்.. மாஸ் காட்டிய மாசு.

By Ezhilarasan BabuFirst Published Dec 9, 2021, 1:05 PM IST
Highlights

 சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர் விடுதியில் 9 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். 

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர் விடுதியில் தங்கியுள்ள 9 மாணவர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. High Risk Country (அதிக பாதிபுள்ள நாடுகள்) எண்ணிக்கை 13-ஆக உயர்ந்துள்ள நிலையில் குறிப்பாக டான்சானியா, கானா போன்ற நாடுகளில் இருந்து வருபர்களுக்கும்  இனி விமான நிலையங்களில் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை கட்டாயம் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். 

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர் விடுதியில் 9 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள விடுதியை பார்வையிட்ட பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர் விடுதியில் 9 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று 1 மாணவருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து விடுதியில் உள்ள 300 மாணவர்களுக்கு  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில். 9 மாணவர்களுக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதித்த மாணவர்கள் கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என கூறினார்.

பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் அதிகமானோர் ஒரே இடத்தில் கூடும் போது தனி மனித இடைவெளியை பின்பற்றுதல், முறையாக கட்டாயம் முககாவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்திய அவர், உயர்கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த அதிகாரிகளோடு நாளை ஆலோசனை மேற்கொண்டு பள்ளி, கல்லூரி வளாகம் மற்றும் விடுதிகள், உணவகங்களில் பின்பற்றப்படும் விதிமுறைகளை கடுமையாக கண்காணிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவித்தார்.

High Risk நாடுகளிலிருந்து வரும் பயணிகளில் 9012 பேருக்கு விமான நிலையங்களில் கொரோனா  பரிசோதனை மேற்கொண்டதில் இதுவரை 11 பேருக்கு தொற்று ( high risk )உறுதி படுத்தப்பட்டுள்ளது. Non Risk Country நாடுகளிலிருந்து வரும் பயணிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 2 பேருக்கு தொற்று உறுதி செய்ய பட்டுள்ளது.13 பேரின் மாதிரிகளை தமிழகத்தில் உள்ள மரபணு சோதனை மையங்களில் ஆய்வு மேற்கொண்டதில் ஒமைக்ரான்  தொற்று கண்டறியப்படவில்லை என்றும் மறு ஆய்வுக்குட்படுத்த பெங்களூருவில் உள்ள மரபணு சோதனை மையத்திற்கு 13 பேரின் மாதிரிகல் அனுப்பப்பட்டுள்ளது.

இன்று அல்லது நாளை அதன் முடிவுகள் வெளிவரும்.  ஒரு மாநில அரசு அதிக மரபணு பரிசோதனை மையங்கள் வைத்துள்ளது தமிழகத்தில்தான் என  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.டான்சானியா, கானா போன்ற நாடுகளில் இருந்து வருபர்களுக்கும்  இனி விமான நிலையங்களில் கட்டாயம் பரிசோதனை மேற்கொள்ளப்படும். High Risk Country (அதிக பாதிபுள்ள நாடுகள்) எண்ணிக்கை 13-ஆக உயர்த்தப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். 


 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பன்னாட்டு விமான நிலையங்கள் உட்பட தொற்று பாதிப்பு ஏற்பட்ட அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகிறோம். தேவையான அனைத்து இடங்களிலும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மேற்கொண்டு வருகிறது.

கைபேசி எண்ணை தவறுதலாக கொடுப்பதாலும், மற்றொருவர் தொலைப்பேசி எண்ணை அளித்து வேறொருவர் தடுப்பூசி செலுத்தி கொள்வதால், குறிப்பிட்ட நபருக்கு சான்றிதழ் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. வாட்ஸ்அப் வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். மேலும் மக்கள் பதட்டப்படவும் தேவையில்லை என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 
 

click me!