பயங்கர அதிர்ச்சி.. விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்ட்டுகள்.. அமித்ஷாவுக்கு உளவுத்துறை கொடுத்த அவசர ரிப்போர்ட்

By Ezhilarasan BabuFirst Published Dec 12, 2020, 1:37 PM IST
Highlights

இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று காலை பாதுகாப்பு படை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை  நடத்தியுள்ளார். போராட்டம் நடைபெறும் இடத்தில் எத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கேட்டறிந்துள்ளார். 

டெல்லியில் பேரெழுச்சியுடன் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவி விட்டதாகவும், அவர்கள் வன்முறையை நிகழ்த்த திட்டமிட்டு இருப்பதாகவும், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் போராட்டக்களத்தில் கலவரம் வெடிக்கலாம் எனவும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.இது நாட்டு மக்களை மிகவும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.   

மத்திய அரசு கடந்த செப்டம்பரில் 3 வேளாண் சட்டங்களை நிறைவேற்றிய, இது விவசாயிகளுக்கு எதிரானது எனவும் உடனே இச்சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தி நாடு முழுதும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியை நோக்கி முற்றுகைப் பேரணி நடத்தி டெல்லியை முற்றுகையிட்டுள்ளனர். டெல்லிக்கு வெளியே சிம்கு எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். 

விவசாயிகளுக்கு காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், டிஆர்எஸ், இடதுசாரிகள், திருணாமுல் காங்கிரஸ், சிவசேனா, திமுக, சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் விவசாய அமைப்பினரை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது போக்குவரத்து இடையூறு மற்றும் சாதாரண மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க ஒத்துழைக்குமாறு அமித்ஷா விவசாயிகள்  சங்க பிரதிநிதிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.  

மேலும் இச்சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் மத்திய அரசு வேளாண் சட்டங்களை முழுமையாக நீக்கும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் பிடிவாதமாக இருந்து வருகின்றனர். இதுவரை விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே நடைபெற்ற 6 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ளன. மேலும் விவசாயிகள் போராட்டத்தை தேசிய அளவில் தீவிரப்படுத்தவும் விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளன. இன்றுடன் 17வது நாளை இந்த போராட்டம் எட்டியுள்ளது.  

இந்நிலையில் வேளாண் சட்டங்களிலும் தேவையான திருத்தங்களை செய்ய தயார் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் விவசாய சட்டங்கள் முழுவதுமாக திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள்  உறுதியாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறாவிட்டால் அடுத்தக்கட்டமாக ரயில் மறியல் போராட்டத்தை நடத்துவோம் என விவசாயிகள் அறிவித்துள்ளனர். இதனால் விவசாயிகள் போராட்டம் திசை  திரும்பும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் விவசாயிகளின் போராட்டத்திற்குள் சமூக விரோதிகள் புகுந்திருப்பதாகவும் மத்தியஅரசு எச்சரித்துள்ளது. 

மாவோயிஸ்டுகளின் ஒரு பிரிவினர் விவசாயிகளின் போராட்டத்திற்கு புகுந்து வன்முறை நிகழ்த்த திட்டமிட்டிருப்பதாகவும், எனவே விவசாயிகள் போராட்டத்தில் எந்தநேரத்திலும் கலவரம் வெடிக்கலாம் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது. அதாவது பேரெழுச்சியுடன் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்தை அந்த சமூக விரோதிகள் திசை திருப்பிக் கொண்டு செல்லும் அபாயம் இருப்பதாக மத்திய உள்துறைக்கு உளவு அமைப்புகள் தகவல் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று காலை பாதுகாப்பு படை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை  நடத்தியுள்ளார். போராட்டம் நடைபெறும் இடத்தில் எத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கேட்டறிந்துள்ளார். அப்போது விவசாயிகள் மத்தியில் அரசியல் வாதிகள், மாவோயிஸ்டு பயங்கரவாதிகள், ஊடுறுவியிருக்கிறார்களா என்பது பற்றியும் கேட்டறிந்ததாக தெரிகிறது. இதனையடுத்து டெல்லியை இணைக்கும் பஞ்சாப், அரியானா, உத்திரபிரதேசம் எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பையும், பாதுகாப்பையும் மேலும் தீவிரப்படுத்த அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.

அதன் பேரில் போராட்டம் நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விவசாய சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், திடீரென விவசாயிகள் தரப்பில் பேசிய சிலர் சர்ஜில் இமாமை விடுதலை செய்ய வேண்டுமென மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர். இது அரசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து தெரிவித்துள்ள விவசாயிகள், தங்களது போராட்டக்களத்தில் எந்த சமூக விரோத சக்திகளோ, பயங்கரவாதிகளோ ஊடுருவவில்லை என மறுப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது. 

 

click me!