உயிரிழந்து 56 நாட்கள் சவுதியில் கேட்பாரற்றுக் கிடந்த உடல், மீட்டு தாயகம் கொண்டு வந்த வைகோ.. கண்ணீர் மல்க நன்றி

By Ezhilarasan BabuFirst Published Dec 12, 2020, 12:14 PM IST
Highlights

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியம் மலைரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த அபிர்ஜான் என்பவர் கடந்த (14.10.2020) அன்று சவுதி அரேபியாவில் இறந்து போனார். அவரது உடலை தமிழகம் கொண்டு வருவதற்கு நிறைய ஆவணங்களை ஆயத்தம் செய்ய வேண்டி இருந்தது. 

உயிரிழந்து சுமார்  56 நாட்கள் சவுதி அரேபியாவில் இருந்த உடலை தனது முயற்சியின் மூலம் தமிழகம் கொண்டு வந்து அவரது உறவினர்களி டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஒப்படைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு அக்குடும்பத்தின் சார்பில் கண்ணீர் மல்க நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்து குறிப்பு:  

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியம் மலைரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த அபிர்ஜான் என்பவர் கடந்த (14.10.2020) அன்று சவுதி அரேபியாவில் இறந்து போனார். அவரது உடலை தமிழகம் கொண்டு வருவதற்கு நிறைய ஆவணங்களை ஆயத்தம் செய்ய வேண்டி இருந்தது. மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள்  கேட்டுக்கொண்டதற்கு இணங்க  வளைகுடாவிலும் தமிழ்நாட்டிலும் உள்ள மதிமுக தோழர்கள் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தனர். மேலும் அயல் உறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், சவுதியில் உள்ள இந்தியத் தூதருக்கும், வைகோ அவர்கள் மின்அஞ்சல் எழுதி இருந்தார்கள். 

இந்நிலையில் அனைத்துப் பணிகளும் முடிக்க தாமதம் ஏற்பட்டு 56 நாட்களுக்குப் பிறகு  10.12.2020 சனிக்கிழமை காலை அபிர்ஜான் உடல் சென்னை வந்து சேர்ந்தது. வியாழன் இரவு 8:00 மணிக்கு குடும்பத்தினர் வசம் ஒப்படைக்கப்பட்டது. ரெட் கிராஸ் ஆம்புலன்ஸ் மூலம் அந்த குடும்பத்தினர் தற்போது வசிக்கின்ற திருச்சிக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டது. கேட்பாரற்றுக் கிடந்த உடலை மீட்டு தாயகம் கொண்டுவரக் காரணமாக இருந்த, வைகோ அவர்களுக்கு, அந்தக் குடும்பத்தினர் கண்ணீர் மல்க  நன்றி கூறினர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

click me!