15 ஆயிரத்திற்கு கீழ் சம்பளம் வாங்குபவர்களுக்கு அடித்தது லக்...!! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!!

Published : Dec 12, 2020, 11:35 AM IST
15 ஆயிரத்திற்கு கீழ் சம்பளம் வாங்குபவர்களுக்கு அடித்தது லக்...!!  மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!!

சுருக்கம்

புதன்கிழமை கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஊழியர் வருங்கால வைப்பு நிதியை(EPF) பற்றிய முக்கிய முடிவு ஒன்றை மத்திய அரசு எடுத்துள்ளது. அதன் படி இனி 15 ஆயிரத்திற்கு கீழ் சம்பளம் வாங்கும் ஊழியர்களின் வைப்பு நிதியை அரசே கொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஊழியர் வருங்கால வைப்பு நிதி என்பது தொழிலாளர்களின் எதிர்கால நலனுக்காக தொழிலாளர் சம்பளத்தில் இருந்து 12% பிடித்தம் செய்யப்படும், அதே போல அவர் வேலை செய்யும் நிறுவனமும் அவர் கணக்கில் 12% செலுத்தும். பின் அது தேவைபடும் சூழலில் அதை திரும்ப எடுத்துக்கொள்ளலாம். இதற்கு 9.5% வட்டி தரப்படுகிறது. 

இப்போது மத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ள முடிவின் படி 15 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வாங்கும் தொழிலாளருக்கு முழு தொகையையும் அரசே வழங்கும், இனி அவர் சம்பளத்தில் இருந்தோ அல்லது அவர் வேலை பார்க்கும் நிறுவனமோ அதை வழங்க தேவை இல்லை. இதற்காக மத்திய அரசு 1,548 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இந்த திட்டமானது இந்தாண்டு அக்டோபர் 1 முதல் அடுத்தாண்டு ஜூன் 30 வரை வேலையில் சேர்பவர்களுக்கு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த திட்டத்தின்படி 2 ஆண்டுகளுக்கு ஊழியர்கள் பயன்பெறலாம். மற்றொரு முக்கியத் தகவல் என்னவென்றால்,1000 ஊழியர்கள் வரை வேலை பார்க்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த சலுகைகள் பொருந்தும். ஆயிரம் ஊழியர்களுக்கு மேல் வேலை பார்க்கும் நிறுவனங்களில், தொழிலாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்படும், 12 சதவீதத்தை மட்டுமே அரசு செலுத்தும். நிறுவனங்கள் செலுத்த வேண்டிய 12 சதவீதத்தை அரசு செலுத்தாது. அதை நிறுவனங்களே செலுத்த வேண்டும்.

PREV
click me!

Recommended Stories

விஜய்க்கு ஓட்டு போடலனா சாப்பாட்டுல விஷம் வச்சிடுவேன்..! குடும்பத்தையே மிரட்டும் தீவிர ரசிகை!
இந்தியாவுக்கு எதிராக சதி... ஒரே அடியில் பாடம் கற்றுக்கொடுக்கணும்..! யூனுஸ் அரசுக்கு எதிராக எடுக்க வேண்டிய ஐந்து நடவடிக்கைகள்..!